Type Here to Get Search Results !

Adhipan Panchangam

அதிபன் பஞ்சாங்கம்

--:--
சூரிய உதயம் / அஸ்தமனம்
அயனம் :
Click to see all கிரக ஓரை
கலி ஆண்டு :
சக ஆண்டு :
கொல்லம் ஆண்டு :
தமிழ் ஆண்டு :
தமிழ் ஆண்டு பெயர் :
திருவள்ளுவர் ஆண்டு :
⏰நாள்
🔔கிழமை
🦜தமிழ் மாதம்

🌙திதி
📢ராகுகாலம்
🩸எமகண்டம்
🎯குளிகை
⏰நல்ல நேரம்
🌸 கௌரி நல்ல நேரம்
🎡 கோதூளி முகூர்த்தம்
🕉️ கரணன் நேரம்
🌞 அபிஜித் முகூர்த்தம்
🪐சந்திராஷ்டம்
🕊️ பஞ்ச பட்சி சாத்திரம்
Pancha Pakshi
🪐 தற்போதைய லக்னம்
⛳அக்ஷ யோகம்
🕉️ விரதம் தினம்


Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

📿 திருவிழாக்கள் & விரதங்கள்

Astro AthibAn Page


horoscope icon மைத்ர முகூர்த்தம sankalpam icon கேள்வி பதில் vratha icon விரத தினங்கள் today specials icon இன்றைய சிறப்புகள் tools icon பண்டிகை / விடுமுறை devotional stories icon வருட ராசி பலன் panchangam icon Calculator monthly specials icon சுப முகூர்த்த நாட்கள் stories icon My Location gowri panchangam கௌரி பஞ்சாங்கம் graha horai icon ஓரை ashtami icon கரி நாட்கள் / அஷ்டமி vastu days icon வாஸ்து நாட்கள் donation icon எண் கணிதம் stories icon விரதங்கள் karanam icon கரணம் namayokam icon நாமயோகம் astrologer answers icon ஜோதிடர் பதில்கள் astrology icon ஜோதிடம் jothidam icon ஜாதகம் பரிகாரம் store icon கடை mantra icon வசிய மந்திரம் vastu icon வாஸ்து muhurtham icon திவாநிசி முகூர்த்தம் moles icon மச்ச பலன்கள் dream icon கனவு பலன்கள் lizard icon பல்லி விழும் பலன்கள் manaiyadi icon மனையடி சாஸ்திரம் dream icon Find Love % vilakku icon விளக்கு ஏற்றும் பலன்கள் palli-sollum icon பல்லி சொல்லும் பலன்கள் tara icon தாரா பலன்கள் horoscope icon ஜாதகம் கணிக்க naligai icon நாழிகை கணக்கு nethram icon நேத்திரம் / ஜீவன் marriage icon திருமண பொருத்தம் panchapakshi icon பஞ்ச பட்சி சாஸ்திரம் chandira icon சந்திராஷ்டம் special info icon சிறப்பு தகவல்கள் prarthana icon பிரார்த்தனை vastu compass வாஸ்து காம்பஸ் articles icon ஆன்மிக தகவல்கள் remedies icon பரிகாரங்கள் monthly specials icon மாத சிறப்புகள் stories icon கதைகள் / கட்டுரை chandira icon EMI / GST stories icon ஆன்மீகம் astrologer answers icon எண் கணித கால்குலேட்டர் chandira icon World Clock donation icon தான பலன்கள் ragu icon இராகு • குளிகை • எமகண்டம் vastu compass QR Code Generator special info icon HTML Viewer

சிம்ம ராசி பலன் - 2016



இந்த சிம்ம ராசி சூரியனின் ஆட்சி வீடு என்பதால். இந்த ராசியில் பிறந்தவர்கள்,பெரும்பாலும் தெய்வ வழிபாடுகளுடன்.பெரிய மனிதர்களின் நட்பையும்,சகவாசத்தையும் எளிதில் பெறுவார்கள்.சமூகத்திலும் பிரபலத்துடன் இருப்பார்கள்.பெரும்பாலும்,எங்கும் எதிலும் தங்களது கையே ஓங்கி இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.பிறரையும் எளிதில் கட்டுப் படுத்தி விடுவார்கள்.பெரும்பாலும் சிவ பெருமானுக்கு ஏதேனும் முன் ஜென்மத்தில் தொண்டு செய்தவர்கள் தான் சிம்ம ராசியில் பிறப்பார்கள்.எனவே இவர்கள் சிவனின் அருளைப் பெற்றவர்கள்.அவரையே இஷ்ட தெய்வமாக வணங்கி வந்தால் வாழ்வில் ஏற்றம் பெறுவார்கள்.தொழில் ஊக்கத்துடன் விளங்கும் இவர்கள்,தங்களது அந்தஸ்த்துக்கு சமமான வர்களுடனயே பழகுவார்கள்.தங்களது அந்தஸ்த்துக்கு குறைவாக இருப்பவர்களிடம் வெறுப்பைக் கொள்வார்கள்.கிரஹ பலத்துடன் கூடிய சிம்ம ராசி அன்பர்கள் 78 வயது வரை இருப்பார்கள்.

2016 ஆம் ஆண்டிற்கான சிம்ம ராசியின் பலாபலன்கள்

அன்பார்ந்த சிம்ம ராசிக்காரர்களே இந்த ஆண்டு முழுவதுமே சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சிலருக்கு ஊர் மாறி ஊர் போகும் படியான நிலை உருவாகும். சனி பகவானின் பார்வை உங்களது தொழில் ஸ்தானத்தில் விழுவதால் வேலைப் பளு அலைச்சல் அதிகம் இருக்கும். எதிர்பாராத இடமாற்றம் கூட சிலருக்கு உண்டாகும். எப்போதுமே சோர்ந்து காணப்படுவீர்கள். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும். அதன்படி மேற்சொன்ன கெடு பலன்கள் கண்டிப்பாக உங்களுக்கு இந்தக் கால கட்டத்தில் மட்டும் சற்றே குறையும்.

8.1.2016 அன்று நடக்கவிருக்கும் ராகு/கேது பெயர்ச்சியை ஆராயும் பொழுது. ராகு பகவான் இந்த ஆண்டு உங்கள் ராசியிலேயே வந்து விடுகிறார். அதனால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். காரணம், சிலருக்கு உணவே விஷம் ஆகலாம். அதனால் சில நாட்கள் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் சென்று வரவும். சிலரது வீட்டில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் காணப்படலாம். குறிப்பாக தலையில் இந்த ஆண்டு அடிபடாமல் பார்த்துக் கொள்ளவும்.

அதுபோல கேது பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் செல்வதால் விடிந்து எழுந்தால் மனைவியுடன் சண்டை என்ற போக்கே காணப்படும். குடும்ப வாழ்க்கை கசக்கும். கூட்டாளிகள் கூட உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். இந்த ஆண்டு மட்டும் எதிலும் கூட்டு முயற்சி செய்ய வேண்டாம்.

இந்த ஆண்டு உங்களுக்கு குரு பகவானின் சஞ்சாரம் மட்டுமே பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதவாது இந்த ஆண்டின் பெரும் பகுதி குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் கூட விலகும். 2 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் இடங்களைப் பார்ப்பதால் சிலருக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல உத்தியோகம் உண்டு. இது வரையில் வேலை தேடி அலைந்தவர்களுக்கு கூட நல்ல உத்தியோகம் இந்த ஆண்டு கிடைக்கும். 7.2.2016 முதல் 20.6.2016 வரையில் மட்டும் குரு பகவானால் உங்களுக்கு மேற்சொன்ன நல்ல பலன்களைத் தர இயலாமல் போகலாம். அதனால் இந்த காலகட்டத்தில் மட்டும் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது நாள் வரையில் இருந்த வந்த வேலைப் பளு குறையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு, புதிய பதவிகள் கூட கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, சக ஊழியர்களின் ஆதரவு போன்ற பல நல்ல பலன்கள் இந்த ஆண்டு உங்களுக்கு உண்டு.

வியாபாரிகள்

வியாபாரிகளைப் பொருத்தவரையில் இந்த ஆண்டு கடுமையான போட்டி இருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். எனினும் இந்த வருடத்தின் பிற்பகுதியில் பல நல்ல பலன்களை நீங்கள் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு பொற்காலம் தான். பண வரவு உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். இருந்தாலும் ராகு/ கேதுக்கள் சாதகமாக இல்லாததால் அதிக முதலீடுகளை மட்டும் தவிர்க்கவும். குரு பலம் இருப்பதால் எதிரிகள் விரிக்கும் வலைகளில் இருந்து தப்புவீர்கள். நன்மைகள் பெருகும் ஆண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் ஆகும். விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். நெல், கோதுமை போன்ற பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். அரசாங்க ஆதரவு உண்டு. வழக்குகள் சாதகம் ஆகும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு இது ஒரு நல்ல காலம் தான். வீட்டில் உங்களது செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலன் மேம்படும். ஆனால் கணவரிடம் மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிறரால் அதிகம் விமர்சிக்கப் பட்டாலும் உங்கள் ஆசைகள் இந்த ஆண்டு நிறைவேறும். நெருப்பு, தீ போன்றவற்றுடன் பழகும் போது மட்டும் இந்த ஆண்டு கவனமாக இருக்கவும்.

பரிகாரம்

ராகுவும், சனியும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் அவசியம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இது தவிர, துர்கை வழிபாடு வெற்றியைத் தரும்.


பொது

பெயரின் முதல் எழுத்துக்கள் Maa, Mee, Moo, Me, Mo, Taa, Tee,Too, Te

அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் மாணிக்கம்

ராசியான எண்கள் அல்லது தேதிகள் 9,18,27,6,24

வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான்

ராசியான நிறம்        சிவப்பு

ராசியான திக்கு        கிழக்கு

ஆகாத நிறம் கருப்பு, நீலம்


பின் குறிப்பு


இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.