Type Here to Get Search Results !

Adhipan Panchangam

அதிபன் பஞ்சாங்கம்

--:--
சூரிய உதயம் / அஸ்தமனம்
அயனம் :
Click to see all கிரக ஓரை
கலி ஆண்டு :
சக ஆண்டு :
கொல்லம் ஆண்டு :
தமிழ் ஆண்டு :
தமிழ் ஆண்டு பெயர் :
திருவள்ளுவர் ஆண்டு :
⏰நாள்
🔔கிழமை
🦜தமிழ் மாதம்

🌙திதி
📢ராகுகாலம்
🩸எமகண்டம்
🎯குளிகை
⏰நல்ல நேரம்
🌸 கௌரி நல்ல நேரம்
🎡 கோதூளி முகூர்த்தம்
🕉️ கரணன் நேரம்
🌞 அபிஜித் முகூர்த்தம்
🪐சந்திராஷ்டம்
🕊️ பஞ்ச பட்சி சாத்திரம்
Pancha Pakshi
🪐 தற்போதைய லக்னம்
⛳அக்ஷ யோகம்
🕉️ விரதம் தினம்


Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

📿 திருவிழாக்கள் & விரதங்கள்

Astro AthibAn Page


horoscope icon மைத்ர முகூர்த்தம sankalpam icon கேள்வி பதில் vratha icon விரத தினங்கள் today specials icon இன்றைய சிறப்புகள் tools icon பண்டிகை / விடுமுறை devotional stories icon வருட ராசி பலன் panchangam icon Calculator monthly specials icon சுப முகூர்த்த நாட்கள் stories icon My Location gowri panchangam கௌரி பஞ்சாங்கம் graha horai icon ஓரை ashtami icon கரி நாட்கள் / அஷ்டமி vastu days icon வாஸ்து நாட்கள் donation icon எண் கணிதம் stories icon விரதங்கள் karanam icon கரணம் namayokam icon நாமயோகம் astrologer answers icon ஜோதிடர் பதில்கள் astrology icon ஜோதிடம் jothidam icon ஜாதகம் பரிகாரம் store icon கடை mantra icon வசிய மந்திரம் vastu icon வாஸ்து muhurtham icon திவாநிசி முகூர்த்தம் moles icon மச்ச பலன்கள் dream icon கனவு பலன்கள் lizard icon பல்லி விழும் பலன்கள் manaiyadi icon மனையடி சாஸ்திரம் dream icon Find Love % vilakku icon விளக்கு ஏற்றும் பலன்கள் palli-sollum icon பல்லி சொல்லும் பலன்கள் tara icon தாரா பலன்கள் horoscope icon ஜாதகம் கணிக்க naligai icon நாழிகை கணக்கு nethram icon நேத்திரம் / ஜீவன் marriage icon திருமண பொருத்தம் panchapakshi icon பஞ்ச பட்சி சாஸ்திரம் chandira icon சந்திராஷ்டம் special info icon சிறப்பு தகவல்கள் prarthana icon பிரார்த்தனை vastu compass வாஸ்து காம்பஸ் articles icon ஆன்மிக தகவல்கள் remedies icon பரிகாரங்கள் monthly specials icon மாத சிறப்புகள் stories icon கதைகள் / கட்டுரை chandira icon EMI / GST stories icon ஆன்மீகம் astrologer answers icon எண் கணித கால்குலேட்டர் chandira icon World Clock donation icon தான பலன்கள் ragu icon இராகு • குளிகை • எமகண்டம் vastu compass QR Code Generator special info icon HTML Viewer

கடக ராசி பலன் - 2016



சிவந்த மேனியுடன், பெரும்பாலும் கல்வியில் ஊக்கத்துடனும் . சற்று உடம்பு பெருத்தும் காணப்படலாம்.இது குருபகவானின் உச்ச வீடாக இருப்பதால்.இவர்களில் பலர் கல்வி நிலையங்களில் வேலைப் பார்க்கக் கூடும் .பேச்சில் சாமர்த்தியமும்,பண விஷயங்களில் சுயநலப் புலிகளாகவும் விளங்குவார்கள்.சமூகத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் அமைவது கடினம். இந்த கடக ராசி, சந்திரனின் ராசி வீடு என்பதால்,இவர்கள் எண்ணங்களும் அதிக சலனங்கள் நிறைந்து இருக்கும்.எப்பொழுதும் ஒரே மாதிரியான மனநிலையில் இருக்க மாட்டார்கள்.ஸ்திர சொத்துக்களையும்,செல்வத்தையும் கபட மார்க்கத்திலயே விருத்தி செய்து கொள்வார்கள். சிலர் தோல் மற்றும்,சரும நோய்களுக்கு ஆளாகலாம்.என்றாலும் சுப க்ரஹ பார்வை இருப்பின் இவர்கள் சமுகத்தில் நன்மதிப்பை பெறக்கூடும்.பொதுவாக கடக ராசிக் காரர்கள் (சுப க்ரஹ பார்வை இருந்தால்) 80 வயது வரை இருப்பார்கள்.

2016 ஆம் ஆண்டிற்கான கடக ராசியின் பலாபலன்கள்

அன்பார்ந்த கடக ராசி அன்பர்களே இந்த ஆண்டு முழுவதுமே உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு நல்ல பலன் அல்ல தான். கல்வி சிலருக்கு தடைபடும். வெளிநாடு செல்லும் பாக்கியம் கூட சிலருக்குத் தாமதமாகும். புகழுக்கு பங்கம் வரும்படியான காரியங்கள் ஏற்படும். மேலும் 5 ஆம் இடத்தில் இருக்கும் சனி உங்கள் ராசிக்கு 7,11,2 ஆம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் அதிகம் ஆகும். சிலருக்குத் திருமணம் கூட தடைபடும். திருமணம் ஆன கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் இடமுண்டு. வாக்கினால் துன்பம் ஏற்படும். வாக்குக் கொடுப்பதைக் கூட நீங்கள் அவசியம் தவிர்க்க வேண்டும். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும். அதன்படி மேற்சொன்ன கெடு பலன்கள் கண்டிப்பாக உங்களுக்கு இந்தக் கால கட்டத்தில் மட்டும் சற்றே குறையும்.

அடுத்து இந்த ஆண்டு 8.1.2016 அன்று நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை தான். இது வரையில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அமர்ந்து நன்மைகள் பல செய்து வந்த ராகு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் வாக்கினால் கேடு ஏற்படும். கவனமாகப் பேசுவது நல்லது. அதிலும் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். குடும்பத்தில் கூட குழப்பங்கள் அதிகம் காணப்படும். அதுபோல, இது வரையில் 9 ஆம் இடத்தில் இருந்து அசுப பலன்களைத் தந்து கொண்டு இருந்த கேது பகவான் இப்போது அஷ்டம ஸ்தானமான 8 ஆம் இடத்துக்கு செல்வது இன்னும் மோசமான அமைப்பாகும். இதனால் உடலில் இது வரையில் இருந்து வந்த வியாதிகள் சிலருக்கு விஸ்வ ரூபம் எடுக்கும். அதனால் மருத்துவச் செலவுகள் கூடும். வண்டி, வாகனத்தில் செல்லும் போதும் கூட மிகுந்த கவனமுடன் செல்வது நல்லது.

அதுபோல குருபகவானின் கோசார பலன்களை கருத்தில் கொள்ளும் போது. இந்த ஆண்டின் பெரும் பகுதி குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் தான் இருக்கிறார். "மூன்றாம் இடத்தில் துரியோதனன் படை மாண்டது" என்று ஜோதிடப் பாடல் உண்டு. எப்படிப் பார்த்தாலும் மூன்றாம் இடத்து குரு சோதனைகளைத் தான் செய்வார். மிகவும் கவனமுடன் இருக்கவும் எனினும் ஒரே ஆறுதலான விஷயம் யாதெனில் குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்தாலுமே கூட அவர் பார்க்கின்ற இடங்களால் நன்மையான பலன்கள் ஓரளவு உங்களை வந்து சேரும். அதிலும் குறிப்பாக மூன்றாம் இடத்தில் இருந்து குரு உங்கள் ராசிக்கு 7,9,11 ஆம் இடங்களைப் பார்ப்பதால், தந்தையாருடன் இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தந்தையுடன் சுமூகப் போக்கு ஏற்படும். சிலருக்கு மூதாதையர் சொத்துக்கள் உரிய நேரத்தில் நிச்சயம் இந்த ஆண்டு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. தீடீர் லாபங்கள் ஏற்பட்டு கடன் சுமை குறையும். ஆக, குரு பகவான் மோசமான இடத்தில் இருந்து உங்கள் மனோ பலத்தை குறைத்தாலும், அவரது பார்வை உங்களுக்கு நன்மையைத் தான் செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகத்தில் கடந்த காலத்தை போல உற்சாகமாக செயல் பட முடியாது. மேல் அதிகாரிகளின் கெடுபிடி அதிகம் இருக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் கூட பங்கம் ஏற்படலாம். அதனால் மேல் அதிகாரிகளுடன் பல்லை கடித்துக் கொண்டாவது அனுசரித்துப் போகவும். சிலருக்கு அலுவலகத்தில் கெட்ட பெயர் உண்டாகும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சக ஊழியர்களே உங்களை தக்க சமயத்தில் பிரச்சனையில் மாட்டி விடலாம். அதனால் எல்லாவற்றையும் நம்பி எல்லோரிடமும் சொல்ல வேண்டாம். கவனம்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சனி வக்கிரம் அடையும் காலத்தில் மட்டும் நன்மையான பலன்கள் உண்டு. எனினும் இந்த ஆண்டு உங்களுக்கு அலைச்சல் அதிகம் இருக்கும். ஆனால் அரசு உதவிகள் உண்டு. கொடுக்கல், வாங்கலில் நண்பர்களுடன் பகைமை ஏற்பட இடமுண்டு. கொடுத்த பணமும் திருப்பி வராது. அதனால் கொடுக்கல், வாங்கலில் மட்டும் கவனமாக இருக்கவும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு ஓரளவே நன்மையான ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். ஆனால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். மறைமுக எதிரிகள் அதிகம் இருக்கத் தான் செய்வார்கள். மற்றபடி புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு கையெழுத்தாகும்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு ஞாபக மறதி அதிகம் ஏற்படும். ஆசிரியர்களிடம் நன் மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளவும். என்றாலும், உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண் கிடைக்காமல் இருக்காது.

விவசாயிகளுக்கு

விவசாயத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் பணம் வரும். அரசு உதவி கிடைக்கும். கவலை வேண்டாம்.

பெண்களுக்கு

பெண்களைப் பொருத்தவரை தேவைகள் பூர்த்தியாகும். ஆனால் டென்ஷன் அதிகமாக இருக்கும். அதனால் குடும்பத்தில் குழப்பங்கள் அதிகம் காணப்படும். உங்களுக்கு இந்த ஆண்டு அமைதியும் பொறுமையும் அவசியம் தேவை. வீண் மன உளைச்சல் வராமல் பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை பூஜித்து விரதம் இருந்து வந்தால். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றியின் ஆண்டாக இருக்கும்.


பொது

பெயரின் முதல் எழுத்துக்கள்    Hee, Hoo, He, Daa, Dee, Doo, De, Do

அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் முத்து

ராசியான எண்கள் அல்லது தேதிகள் 9,18,27,1,28,10

வணங்க வேண்டிய தெய்வம் அம்பாள் (தாய் பார்வதி)

ராசியான நிறம்        சிவப்பு, வெள்ளை

ராசியான திக்கு        தெற்கு

ஆகாத நிறம் பச்சை


பின் குறிப்பு


இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.