மணி பிளாண்டைப் போல் செல்வம் ஈர்க்கும் சங்கு பூ… மகா விஷ்ணுவின் அருளைப் பெறச் சிறந்த செடி!

மணி பிளாண்டைப் போல் செல்வம் ஈர்க்கும் சங்கு பூ… மகா விஷ்ணுவின் அருளைப் பெறச் சிறந்த செடி!

வீட்டில் அமைதி, ஒற்றுமை, ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை நிலைத்து நிலவ, வாஸ்து விதிகளின்படி சில செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் எல்லா செடிகளையும் வீட்டில் வளர்ப்பது ஏற்றதல்ல; சிலவற்றை வீட்டின் வெளியிலும் நட்டுவைக்கக் கூடாது என்பதும் உண்மை. அந்த வகையில் சங்கு பூச் செடி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை எந்த திசையில், எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை வாஸ்து விளக்குகிறது.

நீல நிறத்தைத் தவிர, இளஞ்சிவப்பு மற்றும் வெண்மை நிறங்களிலும் சங்கு பூக்கள் காணப்படுகின்றன. வெண்மை நிறம் சரஸ்வதிக்குரியதாக இருந்தாலும், இப்பூக்களை எல்லா தெய்வங்களுக்கும் சமர்ப்பிக்கலாம்.

நீல நிற சங்கு பூவின் தெய்வீக அர்த்தம்

நீல சங்கு பூ, மகா விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த பூவாகக் கூறப்படுகிறது. இந்த நீல நிற பூவில் நீலகண்டர் சிவபெருமான், ஸ்ரீ கிருஷ்ணர், சனீஸ்வரர் ஆகிய மூன்று தெய்வங்களும் வாசம் செய்கிறார்கள் என ஐதீகம் சொல்லுகிறது. எனவே இந்த மூன்று தெய்வங்களுக்கும் நீல சங்கு பூக்களை அர்ப்பணித்து வழிபடுவது மிகப்புண்ணியம்.

சனி தோஷம் கொண்டவர்கள், வீட்டில் சங்கு பூ செடியை வளர்த்து, அதன் பூக்களை சனி பகவானுக்கு சமர்ப்பித்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

செல்வம் சேர்க்கும் வாஸ்து ரகசியம்

எந்த காரியத்திலும் தடைகள் ஏற்பட்டால், 5 சங்கு பூக்களை நீரில் போட்டு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மணி பிளாண்டிற்குப் பின் செல்வத்தை ஈர்க்கும் சக்தி மிகுந்த செடியாக சங்கு பூவையும் கருதுகிறார்கள்.

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் 7 சங்கு பூக்களை போட்டு, வீட்டின் வடகிழக்கு மூலையில் வைப்பது சிறந்தது. இது கடன், பிரச்சனை போன்ற எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

எந்த திசையில் நட்டால் சிறப்பு?

சங்கு பூவைக் கொடியாக வளர்க்க விரும்பினால், வடக்கு திசையில் நட்டுவைக்க வேண்டும்.
மேற்கு அல்லது தெற்கு திசைகளில் நட்டால் குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி குறையும் என்று வாஸ்து எச்சரிக்கிறது.

இந்த பூ இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பதால், மகா விஷ்ணுவின் அருளைப் பெறவும் தம்பதியரிடையிலான பிணக்குகள் நீங்கவும், சங்கு பூக்களால் விஷ்ணுவை வழிபடுவது நல்லது. இது வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகரிக்கும். மேலும், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலையும் விரட்டும்.

விஜயதசமி நாளின் சிறப்பு

விஜயதசமி நாளில் சங்கு பூக்களை கொண்டு செய்யும் பரிகாரங்கள் மிகுந்த பலனளிக்கும். அந்நாளில் லட்சுமி தேவியை சங்கு பூக்களால் பூஜித்து, பின்னர் அந்த பூக்களை உங்கள் பணப்பை, பீரோ, அல்லது பணபெட்டியில் வைத்து வைக்கலாம். இது நிதி நிலைமையை உறுதியாக்கி, பொருளாதார சரிவைத் தடுக்க உதவும்.

மருத்துவ நன்மைகள்

நீல சங்கு பூ மன அமைதியை அளிக்கும். இதைப் பார்த்தாலே மனக்குழப்பம், கோபம் குறையும்.
இந்தச் செடி உடலில் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியை அளிக்கும் தன்மை கொண்டது.
வீட்டின் வாசலில் வளர்த்தால் வீடு குளிர்ச்சியாக இருந்து, கொசு மற்றும் பூச்சிகள் அண்டாது.

சங்கு பூவிலிருந்து எடுக்கப்படும் சாறு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதன் மணம் சுவாச கோளாறுகளை நீக்கி, இதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.
மேலும், இதில் உள்ள ஆண்டி-ஆக்சிடண்டுகள் சருமத்தை பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

மணி பிளாண்டைப் போல் செல்வம் ஈர்க்கும் சங்கு பூ… மகா விஷ்ணுவின் அருளைப் பெறச் சிறந்த செடி!

0 Comments

மறுமொழி இடவும்

Your email address will not be published. Required fields are marked *