வாஸ்துப்படி படுக்கையறை மற்றும் சமையலறையில் பாம்பு செடி வைப்பது எப்படி?

வாஸ்துப்படி படுக்கையறை மற்றும் சமையலறையில் பாம்பு செடி வைப்பது எப்படி?

இப்படி வைத்தால் பணமும் மகிழ்ச்சியும் பெருகும்!

வீட்டில் அமைதி, நிம்மதி, ஒற்றுமை, ஆரோக்கியம், செல்வம் ஆகியவை நிலைத்திருக்க வேண்டும் என விரும்புவோர், சில வகை வாஸ்து செடிகளை வளர்க்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் முக்கியமான ஒன்று பாம்பு செடி (Snake Plant) ஆகும்.
இது எந்த திசையில் வைக்க வேண்டும்? எப்படிப் பராமரிக்க வேண்டும்? என்ன நன்மைகள் தருகிறது? என்பதனை இப்போது பார்ப்போம்.

பாம்பு செடியின் தன்மை

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த செடிக்கு “மாமியார் நாக்கு” அல்லது “வில்லு செடி” என்றும் பெயர் உண்டு. பெயரில் “பாம்பு” என்றால் பயப்பட வேண்டாம் — இந்த செடி இருந்தால் பாம்புகள் அண்டாது என நம்பப்படுகிறது.
இதன் இலைகள் வாள் வடிவில் நீளமாகவும் பச்சை நிறத்தில் வளைந்து நெளிந்து காணப்படும். அதனால் இதற்கு பாம்பு செடி என்று பெயர் வந்தது.

ஆரோக்கிய நன்மைகள்

பாம்பு செடி செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் செடியாகக் கருதப்படுகிறது. மேலும் இது காற்றிலுள்ள ஃபார்மால்டிஹைட், பென்சீன், சைலின் போன்ற நச்சுப் பொருட்களை நீக்கி சுத்தமான காற்றை வழங்குகிறது. ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதால், தூக்கம் நிம்மதியாகவும், டஸ்ட் அலர்ஜி குறைந்தும் இருக்கும்.

வாஸ்து படி வைக்கும் இடம்

பாம்பு செடியை வீட்டின் உள்ளேயும் வெளியேயும் வைக்கலாம். ஆனால் சரியான இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டமும் பாசிட்டிவ் எனர்ஜியும் அதிகரிக்கும்.

சமையலறை (Kitchen):
பாம்பு செடியை சமையலறையில் வைப்பது மிகவும் நல்லது. அதிக வெளிச்சம் தேவையில்லாததால் கிச்சனில் நன்றாக வளரும். இது கிருமிநாசினியாகவும் செயல்பட்டு வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பெருக்குகிறது.
வீட்டின் செழிப்பு, அமைதி ஆகியவை அதிகரிக்கும்.

  • சிறந்த திசை: கிழக்கு அல்லது தென்கிழக்கு.
  • ஆனால் அடுப்பு அருகில் வைக்கக் கூடாது; அனல், புகை படாத இடம் சிறந்தது.
  • இலைகளில் தூசி படாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

படுக்கையறை மற்றும் ஹால்:
படுக்கையறையில் வைப்பது காற்றை சுத்தப்படுத்தி தூக்கத்தை மேம்படுத்தும்.
ஹாலின் ஒரு மூலையில், வீட்டில் வருவோரின் கண்களில் படுமாறு வைப்பது கண் திருஷ்டியை அகற்றி நல்ல ஆற்றலை தரும்.
இதை தரையில் வைக்க வேண்டும்; மேசை அல்லது அலமாரி மீது வைப்பது வேண்டாம்.
மற்ற செடிகளுடன் சேர்த்து வைக்காமல் தனியாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முன்னெச்சரிக்கை

இந்த செடியின் இலைகளில் சிறு அளவு விஷத்தன்மை உள்ளது. நாக்கில் பட்டால் மரத்துபோல் உணரலாம். எனவே சிறு குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

0 Comments

மறுமொழி இடவும்

Your email address will not be published. Required fields are marked *