அஷ்டபந்தன மருந்து – ஆகம சம்பிரதாயத்தின் அதி முக்கிய அம்சம்
🔱 அஷ்டபந்தன மருந்து – ஆகம சம்பிரதாயத்தின் அதி முக்கிய அம்சம் 🔱
கோவில்களில் நடைபெறும் மகா கும்பாபிஷேகம் என்பது வெறும் அபிஷேக நிகழ்வு மட்டுமல்ல;
அது மூலவர் தெய்வத்தின் ஆவாஹனம், ஸ்தாபனம், சக்தி நிலைநிறுத்தம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும்
மிகப் புனிதமான ஆகம முறைகளின் தொகுப்பாகும்.
அந்த ஆகம முறைகளில்,
மூலவர் சாமி சிலையை பீடத்துடன் (அவுடையார் / ஆதார சக்தி)
நிலையாகவும், சக்தியுடன் கூடியதாகவும்
நிறுத்தி வைப்பதற்கான அடிப்படைப் பணியே
“அஷ்டபந்தனம்” ஆகும்.
🔸 அஷ்டபந்தனம் என்றால் என்ன?
“பந்தனம்” என்பது பிணைத்தல் அல்லது இணைத்தல் என்று பொருள்.
அதாவது,
சிலையை அதன் பீடத்துடன்
உறுதியாக இணைத்து நிலைநிறுத்தும்
ஆகம மருந்தே அஷ்டபந்தன மருந்து ஆகும்.
இது வெறும் கட்டுமானப் பொருள் அல்ல ❗
ஆன்மீக ரீதியாக,
✔️ தெய்வ சக்தி சிலையிலே நிலைபெற
✔️ பூஜை சக்தி வெளியேறாமல் இருக்க
✔️ பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி நிலைத்திருக்க
✔️ ஆலயத்தின் தெய்வீக அதிர்வலை சீராக பரவ
இந்த மருந்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
🔸 ஏன் கும்பாபிஷேகத்திற்கு முன் மருந்து சாத்த வேண்டும்?
கும்பாபிஷேகத்திற்கு முன்
மூலவர் சிலைக்கு இந்த மருந்து சாத்தப்படும்.
இதன் மூலம்:
- சிலை பீடத்துடன் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறது
- அசைவோ, அதிர்வோ ஏற்படாது
- தெய்வ சக்தி நிலையாக உறையும்
- யந்திர / மந்திர சக்தி வெளிப்பட உதவும்
இதனால்,
மண்டலாபிஷேகம் (48 நாட்கள்) முடியும் வரை
புளிப்பான பொருட்கள் (எலுமிச்சை, தயிர் போன்றவை)
அபிஷேகத்தில் பயன்படுத்த மாட்டார்கள்.
ஏனெனில்,
அவை மருந்தின் இயல்பை பாதிக்கக்கூடும்.
🔸 பந்தன மருந்துகளின் வகைகள்
கும்பாபிஷேக மருந்துகள் மூன்று வகைப்படும்:
1️⃣ திரிபந்தனம்
மூன்று பொருள்களால் தயாரிக்கப்படும்.
2️⃣ அஷ்டபந்தனம்
எட்டு பொருள்களால் தயாரிக்கப்படும்.
இதுவே பொதுவாக ஆகம முறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும்.
3️⃣ சுவர்ணபந்தனம்
பொன்னையே உருக்கி வார்த்து தயாரிக்கப்படும்.
மிக உயர்ந்த ஆகம முறையாக கருதப்படுகிறது.
🔸 அஷ்டபந்தனத்தில் சேர்க்கப்படும் 8 பொருட்கள்
அஷ்டபந்தன மருந்து தயாரிப்பில்
சேர்க்கப்படும் பொருட்களுக்கு துல்லியமான
பங்கு கணக்கு (Ratio) உண்டு.
| பொருள் | பங்கு |
|---|---|
| கொம்பரக்கு | 1 |
| கருங்குங்கிலியம் | 3 |
| சுக்கான் | ¾ |
| காவிக்கல் | 3 |
| வெண்மெழுகு | 3 |
| வெண்ணெய் | 3 |
| செம்பஞ்சு | 3 |
| சாதிலிங்கம் | ¼ |
இந்த எட்டு பொருட்களும்
ஆகம விதிப்படி சரியான அளவில்
சேர்க்கப்பட வேண்டும்.
🔸 தயாரிக்கும் முறை
- அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்க்கப்படும்
- பின்னர் உலக்கையால் தொடர்ந்து இடிக்கப்படும்
- இடிக்கும் போது உண்டாகும் சூட்டால்
வெண்ணெய் மற்றும் மெழுகு உருகத் தொடங்கும் - படிப்படியாக மெழுகு பதம் உருவாகும்
அந்த நேரத்தில்:
👉 சூட்டுடன் இருக்கும் மருந்தை எடுத்து
👉 சிலையின் அடிப்பகுதியில் சாத்துவார்கள்
👉 உடனடியாக பீடத்தில் ஸ்தாபனம் செய்யப்படும்
இதனால்
சிலை மற்றும் பீடம்
ஒரே சக்தி மையமாக இணைகிறது.
🔸 பழமையான முறை Vs இன்றைய முறை
முன்னோர் காலங்களில்:
👥 பலர் ஒன்றுகூடி
மாறி மாறி உலக்கையால்
தொடர்ந்து இடித்து
மருந்தை தயாரிப்பது வழக்கம்.
இன்றைய காலத்தில்:
⚠️ நேரக் குறைவால்
சட்டியிலிட்டு சூடாக்கி
மெழுகு பதத்தில்
மருந்து தயாரித்து சாத்துகிறார்கள்.
ஆனால்,
ஆகம சம்பிரதாயப்படி
இடி மருந்து முறையே சிறந்ததாக கருதப்படுகிறது.
📞 அஷ்டபந்தன இடி மருந்து தேவைக்கு தொடர்பு கொள்ள:
பிரசன்ன திலகம்
வாஸ்து ஜோதிட நிபுணர்
Dr. T.T. அதிபன் ராஜ்
📱 95240 20202

0 Comments