வீட்டில் பணத்தடைகள் நீங்க… குளியலறை வாஸ்து சரியில்லையா? ‘படிகாரம்’ பரிகாரம் பலன் தரும் – முழு விவரம்!
குழந்தைக்கு திருஷ்டி நீங்க… வீட்டில் பண பிரச்சனை வராமலிருக்க… குளியலறையில் ‘படிகாரம்’ வைத்தால் பலன் தரும் என நம்பிக்கை!
வீட்டின் ஒவ்வொரு அறையும் சரியான திசையில் இருக்க வேண்டும் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் முக்கிய கோட்பாடு. குறிப்பாக, குளியலறை மற்றும் கழிப்பறை தவறான திசையில் இருந்தாலோ, தவறான பொருட்கள் வைத்தாலோ, குடும்பத்தில் பணநெருக்கடி, சண்டைகள், உடல்நலம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.
வாஸ்து படி குளியலறை எங்கு இருக்க வேண்டும்?
குளியலறை வடக்கு, வடமேற்கு திசையில் அமைக்கப்பட வேண்டும். தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசை தவிர்க்கப்பட வேண்டும். கிச்சனுக்கு அருகிலும், நேராக எதிரே இருப்பதையும் வாஸ்து சாஸ்திரம் ஏற்றுக்கொள்ளாது.
குளியலறையில் வைக்கக்கூடாதவை
கிழிந்த பாய், பயன்படுத்தாத செருப்புகள், எப்போதும் ஈரமாக இருக்கும் தரை – இவை வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும்.
குளித்த பிறகு குளியலறையை உலர்த்தி வைத்தால் பணநேர தடைகள் குறையும் எனவும் நம்பப்படுகிறது.
குளியலறை + கழிப்பறை ஒரே இடத்தில்?
இரண்டும் ஒன்றாக இருந்தால், வாஸ்து தோஷம் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத சூழலில், இரண்டிற்கும் இடையே ஸ்கிரீன் அல்லது partition அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
படிகாரம் பரிகாரம் அதிகம் பேசப்படும் காரணம் என்ன?
வாஸ்துவில் பரிகாரமாக ‘படிகாரம்’ முக்கியமாகக் கருதப்படுகிறது.
குளியலறையில் யாரும் பார்க்காத இடத்தில் படிகாரம் வைப்பது வாஸ்து குறைபாடுகளை தணிக்கும் என்றும், பூச்சிகளைத் தடுக்கவும் உதவும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும், வீடு மற்றும் அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் 50 கிராம் படிகாரம் வைப்பது தீய சக்திகளை நீக்கி, செல்வ அதிர்ஷ்டத்தை கூட்டும் என நம்பிக்கைகள் கூறுகின்றன.
குளிக்கும் நீரிலும் படிகாரம் சேர்ப்பது ஏன்?
குளிக்கும் நீரில் சிறிது படிகாரம் சேர்த்து குளித்தால் திருஷ்டி நீங்கி மன அமைதி கிடைக்கும் என்று பலர் நம்புகின்றனர்.
வியாபார வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறதா?
வியாபாரம் முன்னேற்றம் ஆகவில்லை என்று பலர் கருதினால், படிகாரத்தை கருப்பு துணியில் கட்டி, வீட்டின் நுழைவாயில் அல்லது கடையில் தொங்கவிடலாம். இதனால் தொழில் தடைகள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது.
குழந்தைக்கு திருஷ்டி இருந்தால்…
சிறு படிகாரம் துண்டை குழந்தைக்கு 7 முறை சுற்றி, இதை 3 நாட்கள் தொடர்ந்தால் திருஷ்டி நீங்கும் என பெற்றோர் பலரும் நம்புகின்றனர்.
வாஸ்து, நம்பிக்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை பயன்படுத்தப்பட்டாலும், பல குடும்பங்கள் இன்றும் படிகாரம் பரிகாரத்தை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி வருகின்றன.
வீட்டில் பணத்தடைகள் நீங்க… குளியலறை வாஸ்து சரியில்லையா? ‘படிகாரம்’ பரிகாரம் பலன் தரும்..!

0 Comments