நட்சத்திர ஆலய வழிபாட்டு விளக்கம்
🛕 நட்சத்திர ஆலய வழிபாட்டு விளக்கம்
நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க நம்முடைய நட்சத்திர ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது ஜென்ம நட்சத்திரம் முக்கியமானதாகும். அந்த நட்சத்திர நாளில், அதற்குரிய ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் வாழ்க்கையில் நன்மைகள் நடைபெறும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய 9 கிரகங்கள், தலா 3 நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன.
தசாபுத்தி சரியில்லாமல் இருக்கும் காலங்களில், நட்சத்திர ஆலய வழிபாடு மன அமைதியையும், கிரக பாதிப்பு நிவாரணத்தையும் தரும்.
ஜோதிடத்தில் கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதக பலன்கள் பெரும்பாலும் அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன.
27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், பாதங்களாக (1,2,3,4) பிரிக்கப்பட்டு ஒருவரின் வாழ்க்கை குணங்களையும் செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன.
👉 உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில், உங்களுக்கு உரிய நட்சத்திர ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசித்து, அதற்குரிய மலர்களைச் சூட்டி வழிபடுங்கள்.
இந்த வழிபாடு மன அமைதி, நல்ல சிந்தனை, வாழ்வில் நல்ல மாற்றம் ஆகியவற்றை மிகக் குறுகிய காலத்திலேயே வழங்கும்.

0 Comments