மங்களப் பிரார்த்தனை
பூஜைக்குத் தேவையான பொருட்கள்
விளக்கு, நூல்திரி, எண்ணெய், செம்பு. தண்ணீர், சந்தனம், குங்குமம், திருநீறு,அவல், பொரி, கற்கண்டு, முந்திரிப்பழம், பழம், பூ, துளசி இலை, வாழையிலை, கற்பூரம், கற்பூரத்தட்டு, ஊதுபத்தி, பத்திஸ்டாண்டு, அக்ஷதை.
- தீபம் ஏற்றுதல்
ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி எனக்கூறி
தீபத்தை ஏற்றி, பின்வரும் பிரார்த்தனையைக் கூறவும்.
“எல்லாம்வல்ல இறைவனே! நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும், எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தந்தருள்வாயாக.”
- கலச பூஜை
செம்பில் வைக்கப்பட்டுள்ள நீரில் பூ, அக்ஷதை, துளசி இலைபோட்டு செம்பை உள்ளங் கையால் மூடிக்கொண்டு கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லவும்.
ஓம் கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு ||
3.தூய்மைப்படுத்துதல்
- ஓம் அச்சுதாய நம:
- ஓம் அநந்தாய நம :
- ஓம் கோவிந்தாய நம: என்று கூறி
மலரினால் தீர்த்தத்தை எடுத்து பூக்கள், பூஜைப் பொருட்கள் மீதும், தன்மீதும் தெளிக்கவும்.
- துதிப் பாடல்கள்
i) ஓம் கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் |
உமா ஸுதம் ஸோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் ||
ii) குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு:
குருர்தேவோ மஹேஸ்வர:
குருஸாக்ஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
iii) ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதிகே |
ஸரண்யே த்ர்யம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே ||
5.பாடல்கள்
1) வெள்ளைக் கொம்பன் வினாயகனே
வினைகள் தீர்க்கும் ஐங்கரனே
அன்னை பராசக்தி அருந்தவப் புதல்வா
ஆனை முகனே வினாயகனே (வெள்ளை…)
அகமும் புறமும் இருப்பவனே
அடியார்கள் துயர் துடைப்பவனே
ஆற்றோரத்திலும் குளக்கரை தனிலும்
அமர்ந்தரசாட்சி புரிபவனே (வெள்ளை…)
ஓங்காரப் பொருளின் தத்துவனே
உள்ளத்தினில் குடி கொண்டவனே
உன் புகழ் பாடும் அன்பர்கள் குறையை
உடனடியாகத் தீர்ப்பவனே (வெள்ளை…)
ஓங்காரப் பொருளும் நீதானே
உலகம் என்பதும் உன்வடிவே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே. (வெள்ளை…)
2) ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் -பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம் -பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். (ஓம் சக்தி …)
கணபதி ராயன் – அவனிரு
காலைப் பிடித்திடுவோம்
குணம் உயர்ந்திடவே -விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி…)
சொல்லுக் கடங்காவே -பராசக்தி
சூரத் தனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் – பராசக்தி
வாழியென்றே துதிப்போம் (ஓம்சக்தி)
வெற்றி வடிவேலன் – அவனுடை வ
ரத்தினைப் புகழ்வோம்.
சுற்றி நில்லாதே போ – பகையே
துள்ளி வருகுது வேல் (ஓம் சக்தி)
தாமரைப் பூவினிலே – சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளிணையே – கண்ணிலொற்றிப்
புண்ணியம் எய்திடுவோம் (ஓம் சக்தி)
பாம்புத் தலைமேலே – நடஞ்செய்யும்
பாதத்தினைப் புகழ்வோம் மாம்பழ
வாயினிலே – குழலிசை
வன்மை புகழ்ந்திடுவோம் (ஓம்சக்தி )
செல்வத்திருமகளைத் திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்
செல்வ மெல்லாம் தருவாள் – நமதொளி
திக்கனைத்தும் பரவும் ( ஓம் சக்தி )
3) ராமக்ருஷ்ண ராமக்ருஷ்ண என்று தினம் பாடு
க்ஷேமமாகவாழ அவன் சேவடியைப் பாடு
காமக்ரோத மோகம் நீக்கக் கசிந்துருகிப் பாடு
தூமலரால் பூஜை செய்து துதிகள் மிகப்பாடு (ராமக்ருஷ்ண…)
சாரதா மணாளனையே சந்ததமும் போற்று
காரணமில்லாதருள் கதாதரனைப் போற்று
வீரவிவேகானந்தனைத் தந்தவனைப் போற்று
கூறக்கூற இன்பம் தரும் பேரனையே போற்று (ராமக்ருஷ்ண…)
அர்ச்சனை (பூ)
- ஓம் விநாயகாய நம:
- ஓம் விக்னராஜாய நம:
- ஓம் கௌரி புத்ராய நம:
- ஓம் கணேஸ்வராய நம:
- ஓம் கஜானனாய நம :
- ஓம் ஏகதந்தாய நம:
- ஓம் பூதாய நம:
- ஓம் தக்ஷாய நம:
- ஓம் அத்யக்ஷாய நம:
- ஓம் த்விஜ ப்ரியாய நம:
- ஓம் பாசாங்குச தராய நம:
- ஓம் மூஷிக வாஹனாய நம:
- ஓம் சிவாய நம:
- ஓம் மகேஸ்வராய நம:
- ஓம் சம்பவே நம:
- ஓம் பிநாகினே நம:
- ஓம் சசிசேகராய நம :
- ஓம் வாமதேவாய நம:
- ஓம் விரூபாக்ஷாய நம:
- ஓம் கபர்த்தினே நம:
- ஓம் நீலலோகிதாய நம:
- ஓம் சங்கராய நம :
- ஓம் சூலபாணயே நம :
- ஓம் கட்வாங்கினே நம:
- ஓம் அச்யுதாய நம:
- ஓம் அதீந்த்ராய நம :
- ஓம் அனாதிநிதனாய நம:
- ஓம் அனிருத்தாய நம:
- ஓம் அம்ருதாய நம :
- ஓம் அரவிந்தாய நம:
- ஓம் அச்வத்தாய நம :
- ஓம் ஆதித்யாய நம:
- ஓம் ஆதிதேவாய நம:
- ஓம் ஆனந்தாய நம:
- ஓம் ஈஸ்வராய நம:
- ஓம் உபேந்த்ராய நம:
குங்கும அர்ச்சனை
- ஓம் சிவாயை நம:
- ஓம் துர்காயை நம:
- ஓம் த்ரிபுவனேஸ்வர்யை நம:
- ஓம் சதுர்புஜாயை நம:
- ஓம் வரதாயை நம:
- ஓம் க்ருஷ்ணாயை நம:
- ஓம் மங்கல்யாயை நம:
- ஓம் குலவர்த்தின்யை நம :
- ஓம் மஹாகாள்யை நம :
- ஓம் சரண்யாயை நம:
- ஓம் பயநாசின்யை நம:
- ஓம் ஆகாச காமின்யை நம:
- ஓம் ப்ரக்ருத்யை நம :
- ஓம் விக்ருத்யை நம:
- ஓம் வித்யாயை நம:
- ஓம் ஹிரண்மய்யை நம:
- ஓம் ச்ரத்தாயை நம:
- ஓம் விபூத்யை நம:
- ஓம் ஸுரப்யை நம:
- ஓம் பரமாத்மிகாயை நம :
- ஓம் ஹரிவல்லபாயை நம:
- ஓம் பத்மாலயாயை நம :
- ஓம் பத்மாயை நம :
- ஓம் சுசயே நம:
- ஓம் ஸரஸ்வத்யை நம:
- ஓம் மஹாபத்ராயை நம:
- ஓம் மஹாமாயாயை நம:
- ஓம் வரப்ரதாயை நம:
- ஓம் ஸ்ரீப்ரதாயை நம:
- ஓம் பத்மநிலயாயை நம:
- ஓம் பத்மாக்ஷ்யை நம:
- ஓம் பத்ம வக்த்ராயை நம:
- ஓம் சிவானுஜாயை நம:
- ஓம் வைஷ்ணவ்யை நம:
- ஓம் க்ஞான முத்ராயை நம:
- ஓம் ரமாயை நம:
பூக்களால் அர்ச்சனை
- ஓம் ஸ்கந்தாய நம:
- ஓம் குஹாய நம :
- ஓம் ஷண்முகாய நம :
- ஓம் ப்ராணாய நம:
- ஓம் ப்ரபவே நம
- ஓம் பிங்களாய நம:
- ஓம் விசாகாய நம :
- ஓம் சிகிவாஹனாய நம:
- ஓம் த்விஷட் புஜாய நம:
- ஓம் த்விஷண் நேத்ராய நம:
- ஓம் சக்திதராய நம:
- ஓம் கங்காஸுதாய நம:
- ஓம் மஹாசாஸ்த்ரே நம :
- ஓம் மஹாதேவாய நம:
- ஓம் மஹாதேவ ஸுதாய நம:
- ஓம் அவ்யயாய நம:
- ஓம் லோக கர்த்ரே நம:
- ஓம் லோக பர்த்ரே நம :
- ஓம் மஹாயோகினே நம:
- ஓம் பராத்பராய நம :
- ஓம் த்ரிலோக ரக்ஷகாய நம:
- ஓம் வீராய நம:
- ஓம் தபஸ்வினே நம:
- ஓம் பூத ஸைனிகாய நம
- ஓம் ப்ரம்ம ஸ்வரூபிணே நம:
- ஓம் நரரூபதராய நம :
- ஓம் கதாதராய நம:
- ஓம் சந்த்ரமணி ஸுதாய நம :
- ஓம் குலச்ரேஷ்டாய நம :
- ஓம் சாரதாமணி நாதாய நம:
- ஓம் கங்காதீர நிவாஸாய நம:
- ஓம் தக்ஷிணேஸ்வர வாஸினே நம :
- ஓம் காளீ வரப்ரஸன்னாய நம :
- ஓம் காமகாஞ்சன கதா விதூராய நம:
- ஓம் தோதாபுரீ ப்ரியாய நம:
- ஓம் ஸ்ரீராமக்ருஷ்ணாய நம:
ஓம் ஸமஸ்த நானாவித மந்த்ர பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
மந்திரங்கள்
1 . ஓம் ஸஹநா வவது | ஸஹநெள புனத்து ஸஹ வீர்யம் கரவாவஹை | தேஜஸ்விநா வதீதமஸ்து மா வித்விஷாவஹை||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி :
பொருள் – பிரம்மம் மணமக்களைக் (அல்லது இந்த இல்லத்தாரைக்) காக்கட்டும்.இவர்களை ஒன்றாக வளர்க்கட்டும். இவர்கள் ஒன்றாக ஞானத்திற்குரிய திறமையையும், தகுதியையும் பெறுவார்களாக. இவர்களது கல்வி உண்மை ஞானத்தை இவர்களுக்கு அளிப்பதாகுக. இவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பார்களாக.
- ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:| பத்ரம் பச்யே மாக்ஷபிர் யஜத்ரா:| ஸ்திரை ரங்கைஸ் துஷ்டுவாம்ஸ்வஸ் தனூபி:| வ்யசேம தேவஹிதம் யதாயு:| ஸ்வஸ்தி ந இந்த்ரோ வருத்த ச்ரவா: ஸ்வஸ்தி ந : பூஷா : விச்வவேதா:| ஸ்வஸ்திநஸ் தார்க்ஷியோ பிரிஷ்டநேமி 😐 ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது||
ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :
பொருள் – ஓ தேவர்களே! மணமக்கள் (அல்லது இந்த இல்லத்தார்) தங்கள் காதுகளால் நல்லதையே கேட்பார்களாக. பக்தர்களாகிய இவர்கள் தங்கள் கண்களால் மங்களகர மானவைகளையே காண்பார்களாக! உனது இசை பாடுபவர்களாகிய இவர்கள் திடமான உறுப்புகளுடனும், உடலுடனும் தேவதைகளின் மகிழ்ச்சிக்காகவே வாழ்வார்களாக, பெரும் புகழுடைய இந்திரனும், முற்றறிவுடைய கதிரவனாகிய பூஷாவும். எல்லாத் தீமைகளையும் ஒழிக்கும் கருடனும், வாக்கிற்கு இறைவனாகிய வியாழனும் இவர்களுக்கு மங்களத்தை அருளுக!
- ஓம் விச்வானி தேவ ஸவிதுர் துரிதானி பராஸுவ யத் பத்ரம் தன்ன ஆஸுவ||
பொருள் இறைவா இன்பங்களைக் கொடுப்பவனே மணமக்களின் (அல்லது இந்த இல்லத்தாரின்) எல்லாத் துன்பங்களையும் விலக்குவாயாக. எது நன்மையோ அதை இவர்களுக்குத் தந்தருள்வாயாக.
நைவேத்யம்
நைவேத்யப் பொருட்களை ஸமர்ப்பணம் செய்யச் சிறிதளவு தண்ணீரைக் கையில் எடுக்கவும். (எல்லோரும் சொல்லுக.)
ஓம் பிரம்மார்ப்பணம் பிரம்மஹவிர் பிரம்மாக்னௌ பிரம்மணாஹுதம் பிரம்மைவ தேன கந்தவ்யம் பிரம்ம கர்ம ஸமாதினா – என்று சொல்லி
நைவேத்யப் பொருட்களைச் சுற்றி வலது புறம் கீழே நீரை ஊற்றவும். கீழ்வரும் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுமுறை நைவேத்யத்தை வலது கைவிரல்களால் எடுத்து இறைவனுக்கு ஊட்டவும்.
ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஒம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா
ஓம் ப்ரம்மணே ஸ்வாஹா
தீபாராதனை
கற்பூர ஆரதி காண்பிக்கவும். எல்லோரும் சேர்ந்து சொல்லுக.
திங்களில் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ
அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ
எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ
கங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே.
திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்கு ஸமர்ப்பிக்க வேண்டும். கற்பூர தீபத்தைத் தொட்டு கண்ணிலும், தலையிலும், நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அனைவரும் கற்பூர தீபத்தை வணங்கக் காண்பிக்கவும்.
பிரார்த்தனை
ஓம் ஸர்வே பவந்து ஸுகின :
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பச்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்
எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்.
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியில்லாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பமில்லாத வாழ்வும், துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே! ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!
திருமண வாழ்த்து
(பெரியோர்களும், சுமங்கலிகளும் “மணமக்கள் வாழ்க” என்று கூறும்போது அக்ஷதை, பூ போட்டு மணமக்களை வாழ்த்தவும் )
அறநெறி விரும்பிக் காத்து, அருந்தனம் ஈட்டி, நல்ல முறையினில் தானம் செய்து, மூத்தோர் விருந்தினர் பேணி, இறைவனை என்றும் ஏத்தி, இனிய நற்சேய்கள் ஈன்று, நிறைய நீடூழி காலம் நேர் மணமக்கள்வாழ்க! மலரும் மணமும் போல, மணியும் ஒளியும் போல, இலகும் இல்லற வாழ்வில் ஈருடல் ஒருமன மாக பலவாம் அறங்கள் செய்து, பதினாறான செல்வம் நிலையாய் என்றும் பெற்று நிறைமண மக்கள் வாழ்க.
இந்தத் திருமண விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் மங்களமாக நடப்பதற்கும், மணமகன், மணமகள், இவர்தம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று நிறைவான வளமான வாழ்வு வாழவும் அருள் புரிய இறைவா! உன்னை பணிவுடன் வேண்டுகிறோம்.
திருமணம் மூலம் இல்லற வாழ்வில் புகும் மணமகன்….. (பெயர்) மணமகள்….. ( பெயர்) இருவரும் நல்ல இந்துக் குடும்பத்தை அமைத்து, எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழவும், தெய்வ பக்தி, தேசபக்தி,நல்லறிவு உள்ள குழந்தைகளைப் பெறவும், இவ்வாழ்வு மணமக்களுக்கு மங்களத்தையும், எல்லா க்ஷேமத்தையும் கொடுக்கவும், அன்பும். அறமும், வளமும், சத்குணமும் ஓங்கவும், வாழ்க்கை இறை வாழ்க்கையாக ஆகவும், குடும்பவாழ்வு மோட்சத்தை அருள வழி வகுக்கவும் உனைப் பணிந்து வேண்டுகிறோம்.
புதுமனைப் புகுவிழா வாழ்த்து
உனது திருவருளால் இப்புனித நன்னாளில் இந்த இல்லத்தில் குடிபுகுகின்ற இக்குடும்பத்தினர் என்றும் உனது அருள் பெற்று அறவாழ்வு வாழ்வும், மன அமைதிபெற்று அன்பு மயமான, நிறைவான வாழ்க்கை வாழவும் அருள்புரிய இறைவா! உன்னைப் பணிந்து வேண்டுகிறோம். இவ்வீடு என்றும் ஒளிபெற்றுத் திகழ நாங்கள் உன்னைப் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
பிறந்த தின வாழ்த்து
இறைவா! இன்று பிறந்த நாள் விழா காணும் ……..(பெயர்) எல்லா நலன்களும் பெற்று வளமுடன்வாழ அருள்புரிவாயாக. இந்த நாள் உனது திருவருளால் (பெயர்)…க்கு மங்களம் நிறைந்ததாக இருக்கட்டும். இவர் என்றும் மங்களகரமான செயல்களைச் செய்யட்டும். இவருக்கு சாந்தியும், ஆரோக்கியமும்,சந்தோ ஷமும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்வா யாக, நீ இவரை எப்பொழுதும் அறவழியில் நடத்துவாயாக. இவருக்கு நல்ல குடும்பச் சூழலும், நல்ல நட்பும் என்றும் கிடைக் கவும், இவருக்கு நல்லறிவும், நல்லாசானும் மகான்க ளுடைய வழி காட்டுதலும் எப்பொழுதும் கிடைக்கவும் அருள்புரிவாயாக. இவருக்கு இம்மானிட வாழ்வு புகழும், தெய்வீக ஒளியும் பொருந்தியதாக அமைய அருள் செய்ய இறைவா உன்னைப் பணிந்து வேண்டுகிறோம்.
பூப்புனித நீராட்டுவிழா
இறைவா! இன்று பூப்புனித நீராட்டு விழா காணும் திருவளர்செல்வி… (பெயர்) எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அருள்புரிவாயாக. எல்லாம் வல்ல இறைவனே உனது அருளால் இவருக்கு அறிவு, ஆயுள், பலம், கீர்த்தி, தேஜஸ், பொறுமை, நல்ல குணங்கள், ஆனந்தம், நித்திய மங்களம் ஆகியவை எப்பொழுதும் விருத்தியடையவும், இவர் நல்லொழுக்கத்துடனும், ஆசாரத்துடனும், தயையுடனும் வாழவும் அருள்புரிவாயக. சீதை, நளாயினி, தமயந்தி, சாரதை போன்றோரின் வாழ்வு இவருக்கு வழிகாட்டியாக அமைய அருள்புரிவாயாக. இவர் அறவாழ்வு வாழ்ந்து எல்லா நன்மைகளும் பெற்று சிறப்புடன் வாழ அருள்புரிய இறைவா உன்னைப் பணிந்து வேண்டுகிறோம்.
நோய்களிலிருந்து விடுபட
எல்லாம் வல்ல இறைவனே! கடுமையான நோயினால் துன்புறும் …… (பெயர்) இந்த நோயிலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்யத்து டனும், சிறந்த மன நிலையுடனும், செல்வ வளத்துடனும் மகிழ்ச்சியான வாழ்வுவாழப் பேரருள் புரிவாயாக!
எல்லா நிகழ்ச்சிகளிலும் சொல்லுக
ஓம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல இறைவனே! நீ இந்த இல்லத்திலும், அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளி எப்பொழுதும் அனைவரையும் நல்வழியில் நடத்தி அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் தந்தருள்வாயாக!
இவ்வுலகினைப் படைத்த நீ சுவாசிக்கக் காற்றும், உண்ண உணவும், அருந்த நீரும், காணச் சூரிய சந்திர ஒளியும், எண்ண மனமும், ஏத்திப் போற்ற வாயும், வணங்கச் சென்னியும், கூப்பித்தொழ கரங்களும் அளித்துப் பேரருள் புரிந்துள்ளாய். நாங்கள் எந்நாளும் உனை மறவாமல் அறநெறி தவறாமல் வாழவும், உலகெல்லாம் அன்பும், அறனும்,வளமும் செழிக்கவும், அமைதி நிலவவும் உன்னைப் பணிந்து வேண்டுகின்றோம்.
இறைவா! இப்பிரார்த்தனை நடத்தும் இக்குடும்பத்தாரும், இவர்தம் உற்றார் உறவி னர்களும், நண்பர்களும் உடல் ஆரோக்யத் துடன் எல்லா நலன்களும் பெற்று நிறைவான வளமான வாழ்வு வாழப் பேரருள் புரிய உன்னைப் பணிந்து வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
(3- முறை சொல்லவும்)
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
மங்களம் ஸர்வலோகாய விவேகானந்த தாயினே
சாரதா ப்ராண நாதாய ராமக்ருஷ்ணாய மங்களம்
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவா வசிஷ்யதே
ஓம் சாந்தி : சாந்தி: சாந்தி:
(இரண்டு நிமிட தியானத்திற்குப் பிறகு )
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே.
ஹரி : ஓம் தத் ஸத்
எனக்கூறி தியானம் நிறைவு செய்யவும். அனைவருக்கும் தீர்த்தமும், பிரசாதமும் வழங்கிப் பிரார்த்தனையை நிறைவு செய்வும்.
-சுபம் –
0 Comments