காளிகா மாலை மந்திரம்
காளிகா தேவி மந்திர அனுஷ்டானம்
சுக்கிரவார காலை, புனித ஸ்நானம் செய்து, தூய்மையான வேஷ்டி அணிந்து, ஒரு அறையை சுத்தம் செய்து மெழுகி, அழகான கோலம் போட வேண்டும்.
அதன் மையத்தில் மஞ்சளினால் பிள்ளையாரை வடித்து வைத்து, அவரை காளிகா தேவியாக நினைத்து வழிபடலாம்.
காளிகா மாலை மந்திரம்
ஓம் காளி – ஓம் மாகாளி – ஓம் உக்ரகாளி, உனது பாதாரவிந்தப் பெருமையைக் காணவும், ஏக சொரூபமாய் நின்ற காளி, எங்கும் நிறைந்த காளி, கனகசபையானை ஆடவைத்த காளி, உமைபரமேஸ்வரி காளி, ரத்தக்காளி, கபாலகாளி, ஓங்காரக்காளி, அக்கினிக் கொழுந்தான ஆகாசகாளி, அனந்தகோடி முகமும், அனந்தங்கோடி அஸ்தமுமாய் வந்து மாற்றானாகிய எதிரி வரவிட்ட வம்பு பில்லி சூனியம் – பூதப்பிசாசுகளையெல்லாம் சூலத்தி னால் குத்தி, பாசத்தினால் கட்டி, கட்டு கட்டு, பிடி பிடி இடி இடி முட்டு முட்டு, மோது மோது, முரி முரிகரை கரை, ஓம் ஐயும் கிலியும் கரை, ஓம் சண்முகபவ கரை கரை, ஓம் அகாரரூபா கரை கரை, ஓங்காளி கரை கரை, ஓம் பிடாரி கரை கரை, ஓம் ஐயும் கிலியும் அதிசீக்கிரம் ஆங்காரங்கொண்டு கரை கரை, எரி எரி, சவ்வும் கிலியும் சீக்கிரம் சீக்கிரம், ஓங்காரங்கொண்டு சீக்கிரம் கரை கரை, அண்டாமல் அடி, ஷீர ஷீஷீ ஓங்காளி ஓம் பிடாரி, ஓம் நமசிவய, படு படு நசி நசி, ஓம் சுவாஹா,ஹரி ஓம் குடு குடு பாலி, நடவடி காளி, அவியடியனதி ஓங்காளி பிடாரி, ஓம் நமசிவாய அனலவிக்க சுடுகொடி வெண்ணீறு, நெற்றியிலணிந்து சூலத்தைக் கையில் வாங்கி, நாகம்போல் சீறி, நமன்போல் வருபவரை நாவோடுங் கட்டினேன். நமச்சிவாயன் திருநீறே, ஊரைச் சுற்றியே ஊரண்ணன் கரையில் அதில் வேரைச்சுற்றிய ஐந்தலை நாகம் கருடன் ஆழ்வாரைக் கண்டு அஞ்சினாற்போல, என்னைக் கண்டவர்களும் என் சத்துருக்களும், அஞ்சி நடுங்கி, ஆசாரம்பண்ணி என் காலின் கீழே வந்து வணங்கி, ஓங்காளி, ஓம் பிடாரி, ஓம் நமசிவாய ஓம் சுவாஹா
பின்னர் விபூதி பூசி, ருத்ராக்ஷம் அணிந்து, கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து,
வெத்திலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், ஊதுவத்தி, பழங்கள், தேங்காய், வடை, பாயசம், சக்கரை பொங்கல், இளநீர், பானம் மற்றும் நீல நிற மலர்களை நிவேதனமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அர்ச்சனை செய்து, தீபாராதனை பண்ணி, 108 முறை மந்திரம் அல்லது உருவேற்றம் செய்து, கற்பூர தீபாராதனை செய்த பின் நைவேத்தியம் அளிக்க வேண்டும்.
அந்த நைவேத்தியத்தை ஜெபம் செய்தவர் தானே உட்கொள்ளலாம்.
அன்று மாலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் காளி அம்மன் கோவில் சென்று அர்ச்சனை செய்து, வீட்டுக்கு வந்து அன்றைய இரவு உணவு எடுத்துக் கொள்ளாமல் தரையில் தங்க வேண்டும்.
இவ்வாறு 2 அல்லது 4 நாட்கள் தொடர்ச்சியாக செய்து, கடைசி நாளில் சுப்பிரமணியருக்கும் காளி தேவிக்கும் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.
அந்த நாளில் 12 பரதேசிகளுக்கு (பிச்சைக்காரர்களுக்கு) உணவு அளித்து, அதன் பிறகு தினமும் இரு வேளையும் உணவு உண்ணலாம்.
இதனை தினசரி பூஜையாகவும் செய்யலாம்.
அனுஷ்டானத்தின் பயன்
இந்த மந்திர பூஜையால் சத்ரு, கண்ணோசை, குட்டிச்சாத்து அல்லது ஏவல்கள் போன்ற தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
காத்தவராயன், கருப்பண்ணன், இருளன் கருப்பன், வீரன், மொனடி வீரன், இருச்சி காட்டேரி, ரத்தக் காட்டேரி, சடாமுனி, வாழ்முனி, மனார்சாமி போன்ற தேவதைகளின் ஏவல்கள் கூட இதனால் விலகும்.
ஏவல் நீக்கும் முறை
ஏவலால் பாதிக்கப்படுபவரை ஆதிவாரம் அல்லது செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்குப் பின் ஸ்நானம் செய்து வரச் சொல்லி,
தரையில் மணல் பரப்பி அதில் பீஜாக்ஷரங்கள் (மந்திர எழுத்துக்கள்) எழுத வேண்டும்:
“கிலியும் – ஆங்காளி – ஓங்காளி – ஐயும் – சவ்வும் – ஸ்ரீம் காளி – ரீம் காளி – வவ்வும்”
பிறகு அந்த எழுத்துக்களின் மேல் அந்த நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து,
நடுவீட்டில் அல்லது கூடத்தில் பெரிய வாழையிலையில் விபூதி பரப்பி, அதில் மேலே கூறிய பீஜாக்ஷரத்தை எழுத வேண்டும்.
அதன்பின் தூப தீபம் காட்டி, பழவகை, பலகார வகை நிவேதனம் செய்து, கற்பூர தீபாராதனை செய்ய வேண்டும்.
அதற்கெதிரில் ஒரு வாழையிலையில் அரிசி வைத்து, அதில் ஓம் வட்டமிட்டு “காளி” என எழுதி, காளியைக் குறித்து மந்திரத்தைச் சொல்லி உருவேற்ற வேண்டும்.
அரிசி மாவினால் ஆண் மற்றும் பெண் பதுமை உருவாக்கி, அதற்கு சிகப்பு பூ பூசித்து, மஞ்சள் தோய்த்த புது குட்டையில் நான்கு முக்கால்ரூபாய்களை வைத்து, அந்த பதுமையின் மீது வைக்க வேண்டும்.
அதன் சுற்றிலும் உப்பில்லாத வெல்ல பணியாரம் வைத்து, வேப்பெண்ணையில் “அஅஅ, அட அடா, அடா ஏவலே, நீ எங்கள் காளி முன்னே நில்லாது ஓடிப்போ” என 108 முறை கூறி, ஆகுதி செய்ய வேண்டும்.
அதன் பின் அந்த பதுமைகளை சுடுகாட்டில் எரித்து, நோயாளியை மூன்று முறை சுற்றி, தீயை மூன்று முறை தாண்டச் செய்ய வேண்டும்.
பின்னர் ஸ்நானம் செய்து, காளி மரத்தில் சிறப்பு பூஜை செய்து, விபூதி மற்றும் முடிகயிறு கட்டிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் எல்லா ஏவல்களும் நீங்கி, உடல் மன நலன் கிடைக்கும்.
0 Comments