மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றும் மரபு – ஒளியில் ஒளிந்திருக்கும் ஆன்மீகமும் அறிவியலும்
மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றும் மரபு – ஒளியில் ஒளிந்திருக்கும் ஆன்மீகமும் அறிவியலும்
மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றுவது நம் மரபின் முக்கியமான பகுதி. ஆனால் ஏன் இதைச் செய்ய வேண்டும், இதனால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டால், அதற்குப் பின்னால் ஆழமான ஆன்மீகமும் அறிவியல் காரணங்களும் உள்ளன.
“விளக்கு எரிந்த வீடு வீணாகாது”
இந்த பழமொழி மிகுந்த அர்த்தம் கொண்டது. வீடும் கோயிலும் ஒளியால் நிறைந்திருக்கும்போது, அது பாசிடிவ் எனர்ஜியால் நிரம்பி இருக்கும். தீபத்தின் ஒளி சுற்றியுள்ள நெகடிவ் எனர்ஜியை (தீய அலைகளை) ஈர்த்து அழிக்கும் சக்தி உடையது. அதனால் வீட்டில் விளக்கு எரியும்போது அமைதியும் ஆனந்தமும் நிலைத்து நிற்கும்.
இரண்டு நாட்களுக்குக் கூட வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால், அந்த வீடு சோர்வாகவும் வெறிச்சோடியாகவும் தோன்றும். இதுவே தீப வழிபாட்டின் தத்துவம்.
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் உடல்–மனம் நன்மைகள்
மனித உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில்:
- மூலாதாரம், சுவாதிஷ்டானம் – நல்லெண்ணெய் விளக்கால் தூய்மையடையும்.
- மணிபூரகம், அனாஹதம் – நெய் விளக்கு ஏற்றுவதால் ஆற்றல் பெறும்.
அதேபோல நம் உடலில் உள்ள மூன்று நாடிகள் — சூரியநாடி, சந்திரநாடி, சுஷும்னா நாடி — இவை உயிரின் ஆற்றலோடு தொடர்புடையவை.
- நல்லெண்ணெய் விளக்கு சூரியநாடியைச் சுறுசுறுப்பாக்கும் (செயல், ஆற்றல் தரும்).
- நெய் விளக்கு சுஷும்னா நாடியைத் தூண்டி ஆன்மிக ஒளியைத் தரும்.
இதனால் நெய்தீபமும் நல்லெண்ணெய் தீபமும் இரண்டையும் மாறிமாறி ஏற்றுவது நல்லது.
விளக்கு ஏற்றும் நேரமும் நடைமுறையும்
திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம் என்றாலும், மாலை 6.30 மணியளவில் ஏற்றுவது நம் மரபு. இதை கருக்கல் நேரம் என்கிறார்கள்.
சூரியன் மறைந்த பிறகு சுற்றுச்சூழலில் சில விஷ சக்திகள் பரவக்கூடும். தீபத்தின் ஒளி அவற்றை நீக்கி, வீட்டை பாசிடிவ் சக்தியால் நிரப்புகிறது. இது ஆன்மீக உண்மையுடன் கூடிய அறிவியல் விளக்கமும் ஆகும்.
ஒரு உண்மை நிகழ்வு
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தாய், தன் மகனின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். மகனும் மருமகளும் வேலை நெருக்கடியால் எப்போதும் தாமதமாகவே வீடு திரும்புவார்கள். ஒருநாள் தாய், அவர்களின் மனஅழுத்தம் குறைக்க, மாலை வேளையில் பூஜையறையில் மலர்கள் அலங்கரித்து, தீபம் ஏற்றி வைத்தார்.
வீட்டுக்குள் நுழைந்த மகனும் மருமகளும் அந்த மணமும் ஒளியும் நிறைந்த சூழலில் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்தனர். அந்த நிம்மதி அவர்களுக்கு எந்த கவுன்சிலிங்கிலும் கிடைக்காத மன அமைதியை அளித்தது. அதன்பின் அவர்கள் தினசரி மாலை விளக்கேற்றும் பழக்கத்தைத் தொடர்ந்தனர்.
மெழுகுவர்த்தி வேண்டாம்!
மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்குகள் உடல்நலத்துக்கு கேடு. மெழுகின் புகை ஆஸ்துமா, மார்பு புற்றுநோய் போன்ற நோய்களுக்கு காரணமாகும். எனவே நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் மட்டுமே ஏற்ற வேண்டும்.
பெண் குழந்தைகளும் தீப வழிபாட்டும்
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களே தினசரி விளக்கேற்ற வேண்டும். இது அவர்களின் முகப்பொலிவையும் ஆன்மிக ஆற்றலையும் உயர்த்தும் என்று நம் பண்டைய சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாலை விளக்கேற்றுவது ஒரு வழிபாடு மட்டுமல்ல — அது நம் வீட்டிலும் மனத்திலும் ஒளி பரப்பும் ஒரு ஆன்மீக சாதனை. ஒளி இருப்பிடத்தில் இருள் நிலைக்காது; அதுபோல தீப ஒளியோடு வாழும் வீடு என்றும் நலனும் அமைதியும் பெறும்.

0 Comments