Type Here to Get Search Results !

Adhipan Panchangam

அதிபன் பஞ்சாங்கம்

--:--
சூரிய உதயம் / அஸ்தமனம்
அயனம் :
Click to see all கிரக ஓரை
கலி ஆண்டு :
சக ஆண்டு :
கொல்லம் ஆண்டு :
தமிழ் ஆண்டு :
தமிழ் ஆண்டு பெயர் :
திருவள்ளுவர் ஆண்டு :
⏰நாள்
🔔கிழமை
🦜தமிழ் மாதம்

🌙திதி
📢ராகுகாலம்
🩸எமகண்டம்
🎯குளிகை
⏰நல்ல நேரம்
🌸 கௌரி நல்ல நேரம்
🎡 கோதூளி முகூர்த்தம்
🕉️ கரணன் நேரம்
🌞 அபிஜித் முகூர்த்தம்
🪐சந்திராஷ்டம்
🕊️ பஞ்ச பட்சி சாத்திரம்
Pancha Pakshi
🪐 தற்போதைய லக்னம்
⛳அக்ஷ யோகம்
🕉️ விரதம் தினம்


Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

📿 திருவிழாக்கள் & விரதங்கள்

Astro AthibAn Page


horoscope icon மைத்ர முகூர்த்தம sankalpam icon கேள்வி பதில் vratha icon விரத தினங்கள் today specials icon இன்றைய சிறப்புகள் tools icon பண்டிகை / விடுமுறை devotional stories icon வருட ராசி பலன் panchangam icon Calculator monthly specials icon சுப முகூர்த்த நாட்கள் stories icon My Location gowri panchangam கௌரி பஞ்சாங்கம் graha horai icon ஓரை ashtami icon கரி நாட்கள் / அஷ்டமி vastu days icon வாஸ்து நாட்கள் donation icon எண் கணிதம் stories icon விரதங்கள் karanam icon கரணம் namayokam icon நாமயோகம் astrologer answers icon ஜோதிடர் பதில்கள் astrology icon ஜோதிடம் jothidam icon ஜாதகம் பரிகாரம் store icon கடை mantra icon வசிய மந்திரம் vastu icon வாஸ்து muhurtham icon திவாநிசி முகூர்த்தம் moles icon மச்ச பலன்கள் dream icon கனவு பலன்கள் lizard icon பல்லி விழும் பலன்கள் manaiyadi icon மனையடி சாஸ்திரம் dream icon Find Love % vilakku icon விளக்கு ஏற்றும் பலன்கள் palli-sollum icon பல்லி சொல்லும் பலன்கள் tara icon தாரா பலன்கள் horoscope icon ஜாதகம் கணிக்க naligai icon நாழிகை கணக்கு nethram icon நேத்திரம் / ஜீவன் marriage icon திருமண பொருத்தம் panchapakshi icon பஞ்ச பட்சி சாஸ்திரம் chandira icon சந்திராஷ்டம் special info icon சிறப்பு தகவல்கள் prarthana icon பிரார்த்தனை vastu compass வாஸ்து காம்பஸ் articles icon ஆன்மிக தகவல்கள் remedies icon பரிகாரங்கள் monthly specials icon மாத சிறப்புகள் stories icon கதைகள் / கட்டுரை chandira icon EMI / GST stories icon ஆன்மீகம் astrologer answers icon எண் கணித கால்குலேட்டர் chandira icon World Clock donation icon தான பலன்கள் ragu icon இராகு • குளிகை • எமகண்டம் vastu compass QR Code Generator special info icon HTML Viewer

திருவிளக்கு பூஜை

  1. திருவிளக்கு பூஜையின் சிறப்பு

மாலைப் பொழுதில் திருவிளக்கு ஏற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால், அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மை களும் அருள்வர். வாழ்வில் தூய்மையும்,தெய்வத் தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும், சக்தியும் வளமையும் நிறையும்.

ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மிக ஒருமைப்பாடும், அன்பு உணர்வும் வளரும்; ஆலயத்தின் அருளலைகள் ஊரெங்கும் பரவும்; அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும்; அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர்.

  1. தேவையான பொருட்கள்

திருவிளக்கு, வாழைஇலை, வெற்றிலைப் பாக்கு, நிவேதனப் பொருட்கள் (பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியனவோ ஏதேனும் ஒன்றோ ) விபூதி, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, துளசி, கற்பூரம், கற்பூரத்தட்டு, ஊதுபத்தி,ஊதுபத்தித் தட்டு, எண்ணெய், திரி, தீப்பெட்டி, அக்ஷதை, மஞ்சள், ஒரு குவளை (கலசம்), தீர்த்தம் முதலியன.

  1. பூஜைக்குத் தயாராகுதல்

i. திருவிளக்கைச் சுத்தம் செய்தல்

திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும் போது தெய்வ நாமங்களை மனதில் ஜெபித்துக் கொண்டே செய்ய வேண்டும்

ii. பீடம் அமைத்தல்

திருவிளக்கை வைக்கவேண்டிய பீடம் அல்லது இடத்தை,சாணத்தால் மெழுகி, மாக் கோலமிட்டு தூய்மையாக்க வேண்டும் திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும். திருவிளக்கினை ஒரு தட்டு அல்லது இலையின் மீதுதான் வைக்கவேண்டும்.

iii. அலங்காரம் செய்தல்

திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து, தூயநீரில் விபூதியைக் குழைத்து முறையாகப் பூசிச் சந்தனத்தாலும், குங்குமத்தாலும் பொட்டு வைத்து மலர்ச் சரங்களால் அலங்கரிக்க வேண்டும். குவளையிலும் பொட்டு வைக்க வேண்டும்.

  1. பூஜைக்கு அமருதல்

திருவிளக்கில் எண்ணெய் ஊற்றி, குறைந்தது இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கின் முன் வாழை இலை இட்டு அதில் நைவேத்யப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊதுபத்தியை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்திவைக்கக் கூடாது.

கற்பூரத்தட்டில் சிறிதளவு விபூதி வைத்து, அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத்தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது. பூஜை செய்பவர் பாய்,விரிப்பு போன்ற ஏதாவது ஓர் ஆசனத்தில் அமர வேண்டும். திருவிளக்கு பூஜையினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்துகொள்ள வேண்டும்.

எல்லோரும் நமஸ்காரம் செய்து அமரவும். எல்லோரும் சொல்க…

ஓம் ஸர்வே பவந்து ஸுகின :
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பச்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

  1. கணபதி வாழ்த்து

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

ஓம் கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோகவிநாச காரணம்
நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்

  1. தீபமேற்றி ஆவாஹனம் (தேவியை எழுந்தருளச் செய்தல்)

கோவிலிலிருந்து தீபம் கொண்டு வந்து முதல் விளக்கை ஏற்றுக. எல்லா விளக்குகளிலும் தீபமேற்றுவது வரை எல்லோரும் சொல்க…

ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி

ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

எல்லோரும் கேட்டுச் சொல்லவும்…

ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தந்தருள்வாயாக!

  1. தேவி வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி வினாசானாம் சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே நாராயணி நமோஸ்துதே
சரணாகத் தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே

ஜெய நாராயணி நமோஸ்துதே
ஜெய நாராயணி நமோஸ்துதே
ஜெய நாராயணி நமோஸ்துதே
ஜெய நாராயணி நமோஸ்துதே

  1. திருவிளக்கு அகவல்

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே ஸ்ரீதேவிப் பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத்திரி போட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால்பசுவைத் தாருமம்மா
புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா
வந்த வினையகற்றி மகாபாக்யம் தாருமம்மா
தாயாரே உந்தன் தாளடியில் சரணடைந்தேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்

  1. திருவிளக்குப் பாடல்

கன்யாகுமரி கடல்நடுவே (அ) ரகுபதி
ராகவ… ராகம்

மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்கிதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவே

இருளை நீக்கும் விளக்கிதுவே
இன்பம் ஊட்டும் விளக்கிதுவே
அருளைப் பெருக்கும் விளக்கிதுவே
அன்பை வளர்க்கும் விளக்கிதுவே

இல்லம் தன்னில் விளக்கினையே
என்றும் ஏற்றித் தொழுதிடவே
பல்வித நன்மை பெற்றிடலாம்
பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம்

விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.

  1. கலச பூஜை

குவளையிலுள்ள தண்ணீரில் அக்ஷதை (மஞ்சள்பொடி கலந்த அரிசி ) இட்டு உள்ளங்கையால் குவளையை மூடிக்கொண்டு சொல்லவும்.

கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிம் குரு

மேற்கண்ட மந்திரத்தால் புனிதப்படுத்தப் பெற்ற தீர்த்தத்தைச் சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருகவும்.

பின், சிறிதளவு நீர் விட்டு, கையைச் சுத்தம் செய்யவும். ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து புஷ்பங்களிலும், நைவேத்தியத்திலும் நீர் தெளிக்கவும்.

எல்லோரும் மனதில் அம்பிகையைத் தியானித்துச் சொல்லுக…

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவியடங்கக்
காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.

  1. அர்ச்சனை

வலது கையின் ஆள்காட்டி விரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும்,மலர்களையும் எடுத்து, இடது கையை நெஞ்சோடு சேர்த்து வைத்து, அம்பிகையாகிய திருவிளக்கின் (அடிப்பாகம்) பாதாரவிந்தங்களில் அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனை செய்ய வேண்டும்.

குங்குமத்தால் அர்ச்சனை செய்க

  1. ஓம் சிவாயை நம:
  2. ஓம் சிவ சக்த்யை நம:
  3. ஓம் இச்சா சக்த்யை நம:
  4. ஓம் க்ரியா சக்த்யை நம :
  5. ஓம் ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நம :
  6. ஓம் ஜோதி லக்ஷ்ம்யை நம :
  7. ஓம் தீப லக்ஷ்ம்யை நம:
  8. ஓம் மஹா லக்ஷ்ம்யை நம :
  9. ஓம் தன லக்ஷ்ம்யை நம:
  10. ஓம் தான்ய லக்ஷ்ம்யை நம :
  11. ஓம் தைர்ய லக்ஷ்ம்யை நம :
  12. ஓம் வீர லக்ஷ்ம்யை நம :
  13. ஓம் விஜய லக்ஷ்ம்யை நம:
  14. ஓம் வித்யா லக்ஷ்ம்யை நம :
  15. ஓம் ஜய லக்ஷ்ம்யைநம :
  16. ஓம் வர லக்ஷ்ம்யை நம:
  17. ஓம் கஜ லக்ஷ்ம்யை நம:
  18. ஓம் காமவல்யை நம:
  19. ஓம் காமாக்ஷி ஸுந்தர்யை நம:
  20. ஓம் சுப லக்ஷ்மியை நம :
  21. ஓம் ராஜ லக்ஷ்ம்யைநம :
  22. ஓம் க்ருஹ லக்ஷ்ம்யை நம :
  23. ஓம் ஸித்த லக்ஷ்ம்யை நம :
  24. ஓம் ஸீதா லக்ஷ்ம்யை நம:
  25. ஓம் ஸர்வ மங்கள காரிண்யை நம :
  26. ஓம் ஸர்வ துக்க நிவாரிண்யை நம:
  27. ஓம் ஸர்வாங்க ஸுந்தர்யை நம :
  28. ஓம் ஸௌபாக்ய லக்ஷ்ம்யை நம :
  29. ஓம் ஆதி லக்ஷ்யை நம
  30. ஓம் ஸந்தான லக்ஷ்ம்யை நம :
  31. ஓம் ஆனந்த ஸ்வரூபிண்யை நம :
  32. ஓம் அகிலாண்ட நாயிகாயை நம:
  33. ஓம் ப்ரம்மாண்ட நாயிகாயை நம :
  34. ஓம் ஸுரப்யை நம:
  35. ஓம் பரமாத்மிகாயை நம :
  36. ஓம் பத்மாலயாயை நம :
  37. ஓம் பத்மாயை நம:
  38. ஓம் தன்யாயை நம்:
  39. ஓம் ஹிரண்மய்யை நம :
  40. ஓம் நித்ய புஷ்டாயை நம :
  41. ஓம் தீப்தாயை நம :
  42. ஓம் வஸுதாயை நம:
  43. ஓம் வஸுதாரிண்யை நம:
  44. ஓம் கமலாயை நம :
  45. ஓம் காந்தாயை நம:
  46. ஓம் அனுக்ரஹ ப்ரதாயை நம:
  47. ஓம் அனகாயை நம :
  48. ஓம் ஹரிவல்லபாயை நம :
  49. ஓம் அசோகாயை நம :
  50. ஓம் அம்ருதாயை நம:
  51. ஓம் துர்காயை நம:
  52. ஓம் நாராயண்யை நம :
  53. ஓம் மங்கல்யாயை நம:
  54. ஓம் க்ருஷ்ணாயை நம :

மலர்களால் அர்ச்சனை செய்யவும்

  1. ஓம் கன்யாகுமார்யை நம :
  2. ஓம் ப்ரஸன்னாயை நம :
  3. ஓம் கீர்த்யை நம :
  4. ஓம் ஸ்ரீயை நம :
  5. ஓம் மோஹ நாசின்யை நம:
  6. ஓம் அபம்ருத்யு நாசின்யை நம :
  7. ஓம் வியாதி நாசின்யை நம :
  8. ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:
  9. ஓம் பய நாசின்யை நம :
  10. ஓம் சரண்யாயை நம :
  11. ஓம் ஆரோக்யதாயை நம :
  12. ஓம் ஸரஸ்வத்யை நம:
  13. ஓம் மஹாமாயாயை நம :
  14. ஓம் புஸ்தக ஹஸ்தாயை நம:
  15. ஓம் ஜ்ஞான முத்ராயை நம :
  16. ஓம் ராமாயை நம :
  17. ஓம் விமலாயை நம:
  18. ஓம் வைஷ்ணவ்யை நம:
  19. ஓம் சாவித்ர்யை நம :
  20. ஓம் வாக்தேவ்யை நம:
  21. ஓம் பாரத்யை நம :
  22. ஓம் கோவிந்த ரூபிண்யை நம :
  23. ஓம் ஸுபத்ராயை நம:
  24. ஓம் த்ரிகுணாயை நம :
  25. ஓம் அம்பிகாயை நம :
  26. ஓம் நிரஞ்ஜனாயை நம:
  27. ஓம் நித்யாயை நம :
  28. ஓம் கோமத்யை நம :
  29. ஓம் மஹாபலாயை நம:
  30. ஓம் ஹம்ஸாஸனாயை நம :
  31. ஓம் வேதமாத்ரே நம :
  32. ஓம் சாரதாயை நம :
  33. ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
  34. ஓம் ஸர்வாபரண பூஷிதாயை நம:
  35. ஓம் மஹா சக்த்யை நம :
  36. ஓம் பவான்யை நம:
  37. ஓம் பக்தி ப்ரியாயை நம :
  38. ஓம் சாம்பவ்யை நம :
  39. ஓம் நிர்மலாயை நம:
  40. ஓம் சாந்தாயை நம:
  41. ஓம் நித்ய முக்தாயை நம :
  42. ஓம் நிஷ்களங்காயை நம :
  43. ஓம் பாப நாசின்யை நம :
  44. ஓம் பேத நாசின்யை நம :
  45. ஓம் ஸுகப்ரதாயை நம :
  46. ஓம் ஸர்வேச்வர்யை நம :
  47. ஓம் ஸர்வ மந்த்ர ஸ்வரூபிண்யை நம :
  48. ஓம் மனோன்மண்யை நம:
  49. ஓம் மஹேச்வர்யை நம :
  50. ஓம் கல்யாண்யை நம:
  51. ஓம் ராஜராஜேச்வர்யை நம:
  52. ஓம் பாலாயை நம :
  53. ஓம் தர்ம வர்த்தின்யை நம:
  54. ஓம் ஸ்ரீலலிதாம்பிகாயை நம:

(சிறிது பூக்களை நெஞ்சுக்கு நேரே வைத்து..)

நானாவித மந்த்ர பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

பூக்களைத் தேவியின் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.

12.போற்றுதல்

எல்லோரும் இருகரம் கூப்பி,திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி, அம்பிகையை மனமார நினைத்து 108 போற்றிகளை ஓதவேண்டும். கண்கள் திருவிளக்கிலும், மனம் அம்பிகையிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.

1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி

  1. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
  2. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
  3. மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
  4. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
  5. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
  6. ஈரேழு உலகம் ஈன்றாய் போற்றி
  7. பிறர்வயம் ஆகாப் பெரியோய் போற்றி
  8. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
  9. பேரருட்கடலாம் பொருளே போற்றி
  10. முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
  11. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
  12. அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
  13. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
  14. ஓமெனும் பொருளாய் உள்ளாய் போற்றி
  15. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
  16. மங்கள நாயகி மாமணி போற்றி
  17. வளமை நல்கும் வல்லியே போற்றி
  18. அறம்வளர் நாயகி அம்மையே போற்றி
  19. மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
  20. மின்னொளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
  21. தையல் நாயகித் தாயே போற்றி
  22. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
  23. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
  24. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
  25. சூடாமணியே சுடரொளி போற்றி
  26. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
  27. அருள்பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
  28. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
  29. இல்லக விளக்காம் இறைவி போற்றி
  30. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
  31. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
  32. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
  33. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
  34. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
  35. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
  36. ஜோதியே போற்றி சுடரே போற்றி
  37. ஓதும் உள்ளொளி விளக்கே போற்றி
  38. இருள்கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
  39. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
  40. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
  41. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
  42. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
  43. உணர்வுசூழ் கடந்ததோர் விளக்கே போற்றி
  44. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
  45. உள்ளத்தகழி விளக்கே போற்றி
  46. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
  47. உயிர் எனும் திரிமயக்கு விளக்கே போற்றி
  48. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
  49. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
  50. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
  51. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
  52. ஜோதியாய் உணர்வுமாகும்விளக்கேபோற்றி
  53. தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
  54. கருணையே உருவாம் விளக்கே போற்றி
  55. கற்பனைக் கடந்த ஜோதி போற்றி
  56. அற்புதக் கோல விளக்கே போற்றி
  57. அருமறை சிரத்து விளக்கே போற்றி
  58. சிற்பர வியோம விளக்கே போற்றி
  59. பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
  60. உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
  61. கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
  62. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
  63. பெருகு அருள் சுரக்கும் பெரியோய் போற்றி
  64. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
  65. அருவே உருவே அருவுரு போற்றி
  66. நந்தா விளக்கே நாயகியே போற்றி
  67. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
  68. தீபமங்கள ஜோதி போற்றி
  69. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
  70. பாகம்பிரியா பராபரை போற்றி
  71. ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
  72. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
  73. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
  74. ஆழியான் காணா அடியோய் போற்றி
  75. ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
  76. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
  77. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
  78. பொங்கும் கீர்த்திப் பூரணி போற்றி
  79. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
  80. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
  81. இருநில மக்கள் இறைவி போற்றி
  82. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
  83. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
  84. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
  85. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
  86. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
  87. அஞ்சல் என்றருளும் அன்பே போற்றி
  88. தஞ்சம் என்றவரைச் சார்வோய் போற்றி
  89. ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
  90. ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
  91. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
  92. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
  93. புகழ் சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
  94. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
  95. பூங்கழல் விளக்கே போற்றி
  96. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
  97. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
  98. செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
  99. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
  100. விளக்கிட்டார்க்கு மெய்ந்நெறி விளக்குவாய் போற்றி
  101. நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
  102. தாயே நின்னருள் தருவாய் போற்றி
  103. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
  104. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
  105. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
  106. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
  107. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி.

நைவேத்யப் பொருட்களை அம்பிகைக்குச் ஸமர்ப்பணம் செய்ய வேண்டும். சிறிதளவு தண்ணீர் கையில் எடுத்துக்கொண்டு எல்லோரும் சொல்க…

ஓம் ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர்
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா

நீரை நைவேத்யப் பொருட்களைச் சுற்றி வலது புறம் கீழே ஊற்றவும். கீழ்வரும் ஆறு மந்திரங் களைச் சொல்லி ஆறுமுறை நைவேத்யத்தை வலதுகை விரல்களால் தேவிக்கு ஊட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

கைகளைச் சிறிது நீரால் சுத்தம் செய்யவும்.

14.பாட்டு

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வயானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நான்மைத்தேன் இங்குதாயே
சுடராக வாழவைப்பாய் என்னை நீயே (..அம்மா..)

கண் இரண்டும் உன் உருவே காண வேண்டும்
கால் இரண்டும் உன்னடியை நாட வேண்டும்
பண் அமைக்கும் நா உனையே பாட வேண்டும்
பக்தியோடு கை உனையே கூட வேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண் அளக்கும் சமயபுர மாரியம்மா
மக்களுடைய குறைகளை நீ தீருமம்மா. (..அம்மா..)

நெற்றியினில் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் உன் திருநாமம் நிலவ வேண்டும்
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழ வேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீ இருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா
மடிமீது பிள்ளை எனைத் தள்ளலாமா. (..அம்மா..)

  1. தீபாராதனை

எல்லோரும் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுக. திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூர ஆரதி காண்பிக்க வேண்டும். கற்பூரத்தைக் காட்டும் போது,

எல்லோரும் சேர்ந்து சொல்லுக…

திங்களில் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ
அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ
எங்களுள் ஜோதி நீ ஈச்வர ஜோதி நீ
கங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே.

திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்குச் சமர்ப்பிக்கவும்.

கற்பூர தீபத்தைத் தொட்டுக் கண்களிலும், தலையிலும், நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் கற்பூர தீபத்தைத் தொட்டுக் கொள்ள நின்ற இடத்தில் நின்றவாறே கொடுக்க வேண்டும்.

மறுபடியும் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று, வலம்வரத் தயாராகவும்.

  1. திருவிளக்குகளை வலம் வருதல்

தேவி நாமம் கைதட்டிப் பாடிக்கொண்டு மூன்று முறை வலம் வருக.

ஜய் ஜய் தேவி ஜய் ஸ்ரீ தேவி
ஜய் ஜய் லக்ஷ்மி ஜய் ஸ்ரீ லக்ஷ்மி
ஜய் ஜய் சாரதே ஜய் ஸ்ரீ சாரதே

நின்றவாறே எல்லோரும் சொல்லுக…

மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் மஹேச்வரீ
யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்துதே

நமஸ்காரம் செய்து அமரவும்.

(ஒருவர் 10 நிமிடம் தெய்வ, தேசபக்தி குறித்து உரையாற்ற வேண்டும்)

17.மங்களம்

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரீ மனோகராய சாச்வதாய மங்களம்
குருவராய மங்களம் தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் வேணுக்ருஷ்ண மங்களம்
சீதாராம மங்களம் ராதாக்ருஷ்ண மங்களம்
ராமக்ருஷ்ண மங்களம் சாரதாம்பா மங்களம்
ஆனந்த மங்களம் விவேகானந்த மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈச்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
நாமகீர்த்தனம் பரந்து நானிலம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபம் ஏற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்க என்று சந்ததம் கொண்டாடுவோம்
ஹிந்து சக்தி வெல்க என்று சந்ததம் கொண்டாடுவோம் (சங்கராய…)

  1. பிரார்த்தனை

கண்களை மூடி, இதயத் தாமரையில் அம்பிகை வீற்றிருப்பதைக் காண்க. அமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்லுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின :
ஸர்வே ஸந்து நிராமயா :
ஸர்வே பத்ராணி பச்யந்து
மாகச்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!

ஓம் அஸதோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

பொய்யிலிருந்து என்னை மெய்ம்மைக்கு வழி நடத்துவாயாக! அஞ்ஞான இருளிலிருந்து ஞான ஜோதிக்கு வழி நடத்துவாயாக! மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக!

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ணமேவா வசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

'ஓம்' என எல்லோரும் சேர்ந்து சொல்லி அமைதியாக தியானம் செய்க. (அனைத்து பக்தர்களும் அமைதியாக இருக்க வேண்டும்.)

ஓம்…

(இரண்டு நிமிடங்களுக்குப் பின்…)

ஹரி : ஓம் தத்ஸத்

எனக்கூறி தியானம் நிறைவு செய்க.

குறிப்பு - சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி, பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும். அர்ச்சனை செய்த மலர்களைக் காலால் மிதிக்காமல் நீர் நிலைகளிலோ, சுத்தமான இடங்களிலோ போடவும். தீர்த்த ஜலத்தை அனைவருக்கும் கொடுத்துப் பருகவும்.

குங்குமத்தைக் கவனமாக எடுத்துச் சென்று தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளவும்.

ஸர்வ மங்களமும் உண்டாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.