Type Here to Get Search Results !

AdhibAn Panchangam

Tharpothu Vorai

Click to see all கிரக ஓரை

கடகம் ராசி பலன் 2017

கடகம் 
நன்றிமறவாதவர்களே! உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். குடும்ப நிலைமையை புரிந்து நடந்து கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்தை விற்று கடன் பிரச்னைகளையும் தீர்த்து நகரத்திற்கு, ஊருக்கு அருகில் இடம் வாங்கி வீடு வாங்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரனும், புதனும் சென்றுக் கொண்டிருப்பதால் செல்வாக்குக் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய நண்பர்கள் மீண்டும் தேடி வருவார்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். 5-ம் வீட்டிலேயே சனி நிற்பதால் கெட்ட கனவுகள் அதிகமாக வரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சிறுசிறு அவமானங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது வேதனைப்படுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உங்களுடைய ராசிக்கு 3ல் குரு அமர்ந்திருப்பதால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிகாரிகளுடனான மோதல்கள் விலகும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இடைவிடாத முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.