Type Here to Get Search Results !

Adhipan Panchangam

அதிபன் பஞ்சாங்கம்

--:--
சூரிய உதயம் / அஸ்தமனம்
அயனம் :
Click to see all கிரக ஓரை
கலி ஆண்டு :
சக ஆண்டு :
கொல்லம் ஆண்டு :
தமிழ் ஆண்டு :
தமிழ் ஆண்டு பெயர் :
திருவள்ளுவர் ஆண்டு :
⏰நாள்
🔔கிழமை
🦜தமிழ் மாதம்

🌙திதி
📢ராகுகாலம்
🩸எமகண்டம்
🎯குளிகை
⏰நல்ல நேரம்
🌸 கௌரி நல்ல நேரம்
🎡 கோதூளி முகூர்த்தம்
🕉️ கரணன் நேரம்
🌞 அபிஜித் முகூர்த்தம்
🪐சந்திராஷ்டம்
🕊️ பஞ்ச பட்சி சாத்திரம்
Pancha Pakshi
🪐 தற்போதைய லக்னம்
⛳அக்ஷ யோகம்
🕉️ விரதம் தினம்


Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

📿 திருவிழாக்கள் & விரதங்கள்

Astro AthibAn Page


horoscope icon மைத்ர முகூர்த்தம sankalpam icon கேள்வி பதில் vratha icon விரத தினங்கள் today specials icon இன்றைய சிறப்புகள் tools icon பண்டிகை / விடுமுறை devotional stories icon வருட ராசி பலன் panchangam icon Calculator monthly specials icon சுப முகூர்த்த நாட்கள் stories icon My Location gowri panchangam கௌரி பஞ்சாங்கம் graha horai icon ஓரை ashtami icon கரி நாட்கள் / அஷ்டமி vastu days icon வாஸ்து நாட்கள் donation icon எண் கணிதம் stories icon விரதங்கள் karanam icon கரணம் namayokam icon நாமயோகம் astrologer answers icon ஜோதிடர் பதில்கள் astrology icon ஜோதிடம் jothidam icon ஜாதகம் பரிகாரம் store icon கடை mantra icon வசிய மந்திரம் vastu icon வாஸ்து muhurtham icon திவாநிசி முகூர்த்தம் moles icon மச்ச பலன்கள் dream icon கனவு பலன்கள் lizard icon பல்லி விழும் பலன்கள் manaiyadi icon மனையடி சாஸ்திரம் dream icon Find Love % vilakku icon விளக்கு ஏற்றும் பலன்கள் palli-sollum icon பல்லி சொல்லும் பலன்கள் tara icon தாரா பலன்கள் horoscope icon ஜாதகம் கணிக்க naligai icon நாழிகை கணக்கு nethram icon நேத்திரம் / ஜீவன் marriage icon திருமண பொருத்தம் panchapakshi icon பஞ்ச பட்சி சாஸ்திரம் chandira icon சந்திராஷ்டம் special info icon சிறப்பு தகவல்கள் prarthana icon பிரார்த்தனை vastu compass வாஸ்து காம்பஸ் articles icon ஆன்மிக தகவல்கள் remedies icon பரிகாரங்கள் monthly specials icon மாத சிறப்புகள் stories icon கதைகள் / கட்டுரை chandira icon EMI / GST stories icon ஆன்மீகம் astrologer answers icon எண் கணித கால்குலேட்டர் chandira icon World Clock donation icon தான பலன்கள் ragu icon இராகு • குளிகை • எமகண்டம் vastu compass QR Code Generator special info icon HTML Viewer

மேஷ ராசி பலன் - 2016



பொதுவாக இவர்கள் செவ்வாயை ராசி நாதானகக் கொண்டு இருப்பதால் கோப குணத்தையும், பிடிவாதத்தையும் முரட்டு சுபாவங்களையும் கொண்டு விளங்குவார்கள். மேஷ ராசி மேடான ராசி என்பதால் இவர்கள் வாழ்வில் ஏற்றம் அடைவார்கள் என்பது உறுதி. நீண்ட ஆயுளையும் செல்வம், செல்வாக்கு இவைகளைப் பெற்று விளங்குவார்கள். கிரக பலம் நன்றாக அமைந்தால் செல்வம், செல்வாக்குடன் 70 வயது வரை இருப்பார்கள்.
2016 ஆம் ஆண்டிற்கான மேஷ ராசியின் பலாபலன்கள்
சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். அதாவது உங்களுக்கு இந்த 2016 ஆம் வருடம் முழுவதுமே அஷ்டமச் சனி நடைபெறுகிறது. பொதுவாக ஏழரைச் சனியை விட அஷ்டமச் சனி மிகவும் கொடுமையாகத் தான் இருக்கும். காரணம் ஏழரைச் சனி ஏழரை ஆண்டுகளில் கொடுக்க வேண்டிய கெட்ட பலன்களை அஷ்டமச் சனி இரண்டரை ஆண்டுகளில் ஒரே சமயத்தில் கொடுத்து விடுவார். அதுவும் மேஷ ராசி சனிக்குப் பகை வீடு என்பதால் கெடு பலன்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். நீங்கள் யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதை தெரிந்து கொள்ளும் கால கட்டமாக 2016 ஆம் வருடம் இருக்கும். உறவினர்கள் உடன் நல்ல உறவுகள் தொடர வாய்ப்பில்லை. உறவினர்கள் அனைவரும் விலகி இருக்கும் நேரம் இது. சிலர் சொந்த ஊரில் இருக்க முடியாமல், வேறு ஊருக்கும் இடம் பெயர்ந்து செல்ல நேரிடலாம். ஆனால் வேப்பம் பூவில் கூட தேன் துளி இருப்பதைப் போல, சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும். அதன்படி மேற்சொன்ன கெடு பலன்கள் கண்டிப்பாக உங்களுக்குக் குறையும்.
அடுத்து ராகு - கேதுவின் நிலையை பார்க்கும் போது 6 ஆம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டு இருந்த ராகு/ கேதுக்கள். இந்த வருடம் 8.1.2016 ஆம் ஆண்டு பெயர்ச்சி ஆகிறார்கள். அதன் படி ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் அல்ல. கல்வியில் தடை மந்தம் ஏற்படலாம். முடிக்க வேண்டிய படிப்பு இழுக்கலாம். வெளி நாடு வேலை வாய்ப்புகள் இழுபறி நிலையில் இருந்து பின் அனுகூலம் ஆகும். குடும்பத்தில் குழப்பம் தரும் சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும். மனதில் இனம் புரியாத பயம் ஏற்பட இடம் தரும்.
ஆனால் அதே சமயத்தில் கேது உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் ஓரளவு நல்ல பலன்களும் உண்டு. மேற்கண்ட நிலையை தைரியமாக சமாளித்து விடலாம் என்பதே அந்த நல்ல பலன். சோதனைகள் அதிகம் இருந்தாலும் காரிய வெற்றி இறுதியில் உண்டு. ஆனால், இந்த ஆண்டு முழுவதும் அலைச்சல் அதிகம் இருக்கும். அதன் பிறகே காரியம் சித்தி ஆகும்.
குரு பகவான் இந்த ஆண்டின் பெரும் பகுதி 6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் அலுவலகத்திலும், சுற்றத்திலும் எதிரிகள் அதிகம் உருவாகி நேர்முக, மறைமுக கெடுதல்களை செய்வார்கள். தெய்வ பலம் குறைய இடம் உண்டு. அதனால் உடலில் அசதி அதிகம் இருக்கும். எனினும் குரு பகவானின் பார்வைகள் நன்மையான இடத்தில் விழுவதால் சோதனைகளை சாதனைகளாக ஆக்கி விடலாம். அதிலும் குறிப்பாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 10,12,2 ஆம் இடங்களைப் பார்ப்பதால். தொழில் விருத்தி உண்டு. ஆனால் செலவுகள் குடும்பத்தில் அதிகம் இருக்கும். பணம் ஒரு திசையில் வந்தால் செலவு எட்டுத் திசைகளிலும் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் இந்த ஆண்டு உண்டு (மாதக் கிரகங்களின் சஞ்சாரம் ஆறுதல் அளிப்பதால்). அதன் காரணமாகவும் செலவு கையைக் கடிக்கும். பெரிய அளவில் முதலீடு செய்து புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று இருப்பவர்கள் மட்டும் கொஞ்சம் யோசித்து தசா புத்தியின் நிலையையும் அறிந்து செயல்படுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
சிறப்பான பலன்களை இந்த ஆண்டு எதிர்பார்க்க இயலாது. ஆனால் சம்பள உயர்வுகள் உண்டு. மேல் அதிகாரிகளுடன் அனுசரித்துப் போகவும். தேவை இல்லாத இடமாற்றங்கள் ஏற்பட இடமுண்டு. ஆனால் சிலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் ஏற்பட்டு. அதுவே உங்களுக்கு சோதனையாக அமையலாம். வேலை பளு அதிகரிக்கும் காலம். உங்களுக்குக் கொடுக்கப் பட்ட பொறுப்புக்களை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் கோரிக்கைகள் சில அலைச்சலுக்குப் பிறகே நிறைவேறும். மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு சோதனை கலந்த சாதனையாக இருக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். பாடுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் கேது சாதகமாக இருப்பதால் இறுதியில் வெற்றி உண்டு.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டு மிகவும் சுமாராகத் தான் இருக்கும். அதிக சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டி இருக்கும். கவலை வேண்டாம் உங்களது முயற்சிகளுக்குப் பலன் இல்லாமல் போகாது.
வியாபாரிகளுக்கு
அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆனால், முயற்சிக்குத் தக்க பலன் உண்டு. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உங்கள் நிறுவனங்களை அல்லது உங்கள் சொத்துக்களை காப்பீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
விவசாயிகளுக்கு
உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு. வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பணத் தட்டுப் பாடுகள் வந்து விலகும்.
பெண்களுக்கு
ஆடம்பரச் செலவுகளால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். எனினும் சந்தோஷத்துடன் தான் காணப்படுவீர்கள். கணவரின் அன்பு கிடைக்கும். கேதுவால் நன்மை உண்டு.
பரிகாரம்
காக்கைக்கும் அன்னம் இட்டு உண்ணுங்கள். ராகு காலத்தில் துர்கா பூஜை வெற்றியைத் தரும்.
பொது
பெயரின் முதல் எழுத்துக்கள் Choo, Che, Cho, Laa, Lee, Loo, Le, Lo, A
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் பவளம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 1,2,10,11,20,28
வணங்க வேண்டிய தெய்வம் முருகப்பெருமான்
ராசியான நிறம் சிவப்பு
ராசியான திக்கு வடகிழக்கு
ஆகாத நிறம் கருப்பு
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.