Type Here to Get Search Results !

Adhipan Panchangam

அதிபன் பஞ்சாங்கம்

--:--
சூரிய உதயம் / அஸ்தமனம்
அயனம் :
Click to see all கிரக ஓரை
கலி ஆண்டு :
சக ஆண்டு :
கொல்லம் ஆண்டு :
தமிழ் ஆண்டு :
தமிழ் ஆண்டு பெயர் :
திருவள்ளுவர் ஆண்டு :
⏰நாள்
🔔கிழமை
🦜தமிழ் மாதம்

🌙திதி
📢ராகுகாலம்
🩸எமகண்டம்
🎯குளிகை
⏰நல்ல நேரம்
🌸 கௌரி நல்ல நேரம்
🎡 கோதூளி முகூர்த்தம்
🕉️ கரணன் நேரம்
🌞 அபிஜித் முகூர்த்தம்
🪐சந்திராஷ்டம்
🕊️ பஞ்ச பட்சி சாத்திரம்
Pancha Pakshi
🪐 தற்போதைய லக்னம்
⛳அக்ஷ யோகம்
🕉️ விரதம் தினம்


Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

📿 திருவிழாக்கள் & விரதங்கள்

Astro AthibAn Page


horoscope icon மைத்ர முகூர்த்தம sankalpam icon கேள்வி பதில் vratha icon விரத தினங்கள் today specials icon இன்றைய சிறப்புகள் tools icon பண்டிகை / விடுமுறை devotional stories icon வருட ராசி பலன் panchangam icon Calculator monthly specials icon சுப முகூர்த்த நாட்கள் stories icon My Location gowri panchangam கௌரி பஞ்சாங்கம் graha horai icon ஓரை ashtami icon கரி நாட்கள் / அஷ்டமி vastu days icon வாஸ்து நாட்கள் donation icon எண் கணிதம் stories icon விரதங்கள் karanam icon கரணம் namayokam icon நாமயோகம் astrologer answers icon ஜோதிடர் பதில்கள் astrology icon ஜோதிடம் jothidam icon ஜாதகம் பரிகாரம் store icon கடை mantra icon வசிய மந்திரம் vastu icon வாஸ்து muhurtham icon திவாநிசி முகூர்த்தம் moles icon மச்ச பலன்கள் dream icon கனவு பலன்கள் lizard icon பல்லி விழும் பலன்கள் manaiyadi icon மனையடி சாஸ்திரம் dream icon Find Love % vilakku icon விளக்கு ஏற்றும் பலன்கள் palli-sollum icon பல்லி சொல்லும் பலன்கள் tara icon தாரா பலன்கள் horoscope icon ஜாதகம் கணிக்க naligai icon நாழிகை கணக்கு nethram icon நேத்திரம் / ஜீவன் marriage icon திருமண பொருத்தம் panchapakshi icon பஞ்ச பட்சி சாஸ்திரம் chandira icon சந்திராஷ்டம் special info icon சிறப்பு தகவல்கள் prarthana icon பிரார்த்தனை vastu compass வாஸ்து காம்பஸ் articles icon ஆன்மிக தகவல்கள் remedies icon பரிகாரங்கள் monthly specials icon மாத சிறப்புகள் stories icon கதைகள் / கட்டுரை chandira icon EMI / GST stories icon ஆன்மீகம் astrologer answers icon எண் கணித கால்குலேட்டர் chandira icon World Clock donation icon தான பலன்கள் ragu icon இராகு • குளிகை • எமகண்டம் vastu compass QR Code Generator special info icon HTML Viewer

தீபாவளி ‎பெயர்க் காரணம் - ‎தோற்ற மரபு . ஹிந்து பண்டிகையாகும்.

           தீபாவளி (சமக்கிருதம்: दीपावली )அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்பெறுகின்ற ஓர் ஹிந்து பண்டிகையாகும்.
         
             இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை,பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஐப்பசி அமாவாசைமுன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். கிரெகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 16 லிருந்து நவம்பர் மாத 17 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக ஹிந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்தியா, நேபால், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

பெயர்க் காரணம்

          'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


தோற்ற மரபு   ஹிந்துக்களின் தீபாவளி                               ஹிந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.                                                           புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

  1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
  2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன்இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது. 
  3. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
       நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். தீபம் வழிபாடு ஸ்ரீ தீபாவளி என நாம் கொள்ளலாம். நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த நாளை அவன் விருப்பப்படி கொண்டாடும் நாள் என்று ஒரு கதையும் இருக்கிறது.
          நரகாசுரன் கதையைப் பார்ப்போம். மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்றார். அபபோது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பொற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.
            பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.
          நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
         நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
           தீபாவளி நரகாசுரன் என்ற தீமையை அழித்த நாள். அதனால் அன்று தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

சீக்கியர்களின் தீபாவளி

    1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி 

        மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

         தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

           தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம்(செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
          தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில்கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

பிற நாடுகளில் தீபாவளி மேற்குநாடுகளில்                    தீபாவளிமேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து ஹிந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய ஹிந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.